உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னரான வாழ்வாதார அபிவிருத்தி: மட்டக்களப்பை மையப்படுத்திய ஓர் ஆய்வு 2023


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-4
Year of Publication : 2023
Authors : Kandasamy Sathiyasegar


Citation:
MLA Style: Kandasamy Sathiyasegar, "Post Civil War Livelihood Development Based on Batticaloa, 2023" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I4 (2023): 20-26.
APA Style: Kandasamy Sathiyasegar, Post Civil War Livelihood Development Based on Batticaloa, 2023, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i4), 20-26.

சுருக்கம்:
இலங்கையின், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு சமூக பொருளாதார மற்றும் அரசியல்ரீதியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இதற்கு கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமும்,அதன் விளைவுகளும் முக்கிய பங்கு வகித்துள்ளன.2009ல் யுத்தம் முடிவுக்கு வந்தது,ஆய்வுப் பிரதேசத்தில் யுத்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்வியல் நிலைமைகளையும், பிரச்சினைகளையும், வாழ்வாதார அபிவிருத்தியையும் வாழ்வாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் காரணிகளையும் கண்டறிதலை நோக்கமாகக் கொண்டு, பண்புரீதியான முறைமையியலினடிப்படையில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இடப்பெயர்வு, வறுமை, வேலையின்மை, குறையுழைப்பு, பொருளாதார பற்றாக்குறை, சமுதாய ஏற்றத்தாழ்வுகள், போதைப்பொருள் பாவனைதற்கொலை, பாலியல் துஸ்பிரயோகம், களவு, கொலை, கொள்ளை,குடும்பச் சிதைவு, கைவிடப்பட்ட சிறுவர்கள், பாதிக்கப்பட்ட பெண்கள், இடப்பெயர்வு, குடியகல்வு, பிரதேச முரண்பாடுகள், கடத்தல்கள், இலஞ்சம் அதிகரித்தல், இளங்குற்றவாளிகள் அதிகரித்தல், வதிவிடமின்மை, உளநல வீழ்ச்சி, விபத்துக்களில் உயிரிழப்புக்கள் அதிகரிப்பும் உடல் ஊனமுறுதலும்,கல்வி, சுகாதாரம் குறைவாக காணப்படுதல், பாடசாலை இடைவிலகல், சிறுவர்தொழிலாளர் அதிகரிப்பு, நுண்கடன் பிரச்சினைகள், முதியோர் புறக்கணிப்புக்கள், போன்ற பல பிரச்சினைகளும் யுத்தத்தின் பின் அதகரித்துள்ளதனை ஆய்வின் மூலம் அறியமுடிந்தது.

முக்கிய வார்த்தைகள்:
யுத்தம், வாழ்வாதாரம், அபிவிருத்தி.

துணைநூற்பட்டியல்:
[1] அருள்மொழி.செ, (2008),“கல்வி ஆய்வு முறைகள்”, எவகிறீன் பிரிண்டர்ஸ்.
[2] சண்முகலிங்கம்.க, (2007) “கூடம்”, ஜனவரி-மார்ச்
[3] சின்னத்தம்பி.க, (2007),“கல்வி ஆய்வியல்”, சேமமடு பதிப்பகம்.
[4] நந்தகுமார்.வைஇ (2008), “ஆய்வு முறையியலும் நுட்பங்களும்”, பேராதனைப் பல்கலைக்கழகம்.
[5] றொபின்சன்.அ, (2006),“சமூகவியல் கட்டுரைகள்”, பூபாலசிங்கம் புத்தகசாலை.
[6] Kalinga Tudor Silva, M.G.M Razaak, Dhammika Hearth et al (2018) Postwar Livelihood Trends in Northern and Eastern Sri Lanka, ICES.
[7] Sarantakos.S, (1993), “Social Research”, Macmillan education, Australia Pvt ltd.
[8] Suresh Kanesh and Mumthaj Sameem (2018), Post -War Livelihood Development in Batticaloa District, Sri Lanka.
[9] UN OCHA(2010), Early Recovery in 8 Resettled divisions of Batticaloa and Trincomalee Districts, Outstanding Needs and Activities
[10] UN OCHA(2010), Early Recovery in 8 Resettled divisions of Batticaloa and Trincomalee Districts, Outstanding Needs and Activities
[11] UN HABITAT (2015), Improving Accessibility in Remote Villages in Batticaloa, Project for Rehabilitation of Community Infrastructure, Improvement of Livelihoods and Empowerment of women in the Nothern and Eastern Provinces (RCI)
[12] UN HABITAT (2016), Building Environmentally Friendly Community Infrastructure: Multi-Purpose Community Centre, Batticaloa District.
[13] Vasuki Jeyasankar and Savini Ganhewa (2008), Making Ends Meet: Women’s Livelihoods in Post-War Sri Lanka, International Centre for Ethnic Studies.