உபநிடதங்களில் தியானம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-3
Year of Publication : 2023
Authors : Mrs. Duhaya Peranandham, Dr. (Mrs.) Vigneswary Pavanesan


Citation:
MLA Style: Mrs. Duhaya Peranandham, Dr. (Mrs.) Vigneswary Pavanesan, "Meditation on the Upanishads" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I3 (2023): 33-39.
APA Style: Mrs. Duhaya Peranandham, Dr. (Mrs.) Vigneswary Pavanesan, Meditation on the Upanishads, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i3), 33-39.

சுருக்கம்:
இந்து தர்மத்தின் உயரிய உண்மைகளின் உறைவிடமாகவும், இந்து தத்துவச் சிந்தனைகளின் அடி ஊற்றுக்களாகவும் அமையப்பெற்றுள்ளவை உபநிடதங்களாகும். வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழும் உபநிடதங்களானவை இந்துமதத்தின் பிரஸ்தான திரயங்களில் முதன்மையான நூலாகத் திகழும் சிறப்பினையுடையவை. ‘ஸத்’ எனும் சொல்லினடியாகத் தோற்றம்பெற்ற உபநிடதங்களானவை நிலையற்ற சம்சார வாழ்க்கையிலிருந்து நம்மைத் தளர்த்தி விடுவிக்கும் தெய்வீக ஞானமாகவும் நமது உண்மை இயல்பை மறைக்கின்ற அறியாமையை அழித்து இறைவன் என்ற பிரமத்தை நோக்கி அழைத்துச் செல்பவையாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு இறைவனை அடைதல் தான் ஒவ்வொரு ஆன்மாக்களின் இலட்சியம் என உபநிடதங்கள் செப்புகின்றன. இதுவே பிறவாப் பேரின்ப நிலை எனப்படும் முத்திநிலையாகும். ஆன்மாக்களது வாழ்வியல் இலட்சியமான முத்திநிலையினை இந்த உலகியல் வாழ்விலேயே வாழ்ந்தபடி அடையுமாறு உபநிடதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்காக ஒவ்வொரு உபநிடதங்களும் காட்டிய சிறந்த வழியே தியானமாகும். தியானம் என்பது இறைவன் மீது எமது கவனத்தை இடைவிடாது செலுத்துவதாகும். உபநிடதகால குருகுலக்கல்வியின்போது சீடர்களுக்கு பிரமத்தின் உண்மைத்தன்மை விளக்கப்படுவதுடன் அதனை அடையும் வழியாக தியானத்தையே சுட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே உபநிடதங்களானவை ஆன்மாக்கள் உலகியல் துன்பங்களிலிருந்து விடுபட்டு இறைவனை அடைவதற்கான சிறந்த வழியாக தியானத்தையே பறைசாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உபநிடதங்களில் தியானம் பற்றிய கருத்தமைவுகள் பலவும் செறிவாகக் காணப்படுகின்றன என்ற கருதுகோளினை அடிப்படையாக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது.

துணைநூற்பட்டியல்:
[1] அண்ணா(உரை),தைத்திரீயோபநி~த்து, ஸ்ரீ ராம கிரு~;ணமடம், சென்னை.
[2] (.…………………….),(உரை),உபநி~த்ஸாரம்(5ம்பாகம்)மஹாநாராயணஉபநி~த்து, ஸ்ரீராமகிரு~;ணமடம், சென்னை.
[3] ஆண்டியப்பன், இரா., (2001),தியானம், பாரதி பதிப்பகம், சென்னை.
[4] கிரு~;ணமூர்த்தி,ஜே.,(1991),தியானம், கவிதா பப்ளிகே~ன், சென்னை.
[5] சுவாமி ஆசுதோ~hனந்தர், (உரை), (2002),மண்டூக்ய உபநி~தம், ஸ்ரீராம கிரு~;ணமடம் சென்னை.
[6] (.…………………….),(உரை),ஈசாவாஸ்ய உபநிதம், ஸ்ரீராமகிரு~;ணமடம், சென்னை.
[7] (.…………………….), (உரை),கேன உபநி~தம்;, ஸ்ரீராமகிரு~;ணமடம், சென்னை.
[8] (.…………………….), (உரை),கடஉபநி~தம்;, ஸ்ரீராமகிரு~;ணமடம், சென்னை.
[9] (.……………………), (உரை),முண்டக உபநி~தம்;, ஸ்ரீராமகிரு~;ணமடம், சென்னை.
[10] சுவாமிஅஜராத்மானந்தர்(தமிழில்),ஈசாவாஸ்யோபநிடதம்;, ஸ்ரீராமகிரு~;ணமடம், சென்னை.
[11] தனபாலசிங்கம்,செ.,உபநிடதச் சிந்தனைகள், உரும்பிராய், சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயில,; உரும்பிராய்.
[12] தேவநாதன்,சி.எஸ்., (2007) சித்தர்களின் தியானம், யோகம், ஞானம், ஸ்ரீ இந்து பப்ளிகே~ன்ஸ், சென்னை.
[13] பொன்னையா,ஐ.,(உரை), (2007),சுவேதாசுவதரம்;, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை.
[14] வரதராஜன், ஊ.,(தமிழில்) (2010),மன ஒருமைப்பாடும், தியானமும், ஸ்ரீராமகிரு~;ணமடம், சென்னை.
[15] ஸ்வாமி, (2008),தியானம் அதன் விஞ்ஞானம், புவனேஸ்வரி பதிப்பகம், சென்னை.