சிவமயம்சைவசித்தாந்தத்தில் பதி உண்மை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-3
Year of Publication : 2023
Authors : Mr. Samithamby Ponnuthurai, Dr. (Mrs.) Vigneswary Pavanesan


Citation:
MLA Style: Mr. Samithamby Ponnuthurai, Dr. (Mrs.) Vigneswary Pavanesan, "Shivaism It is true in Saivaism" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I3 (2023): 26-32.
APA Style: Mr. Samithamby Ponnuthurai, Dr. (Mrs.) Vigneswary Pavanesan, Shivaism It is true in Saivaism, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i3), 26-32.

சுருக்கம்:
சைவசித்தாந்தம் கூறும் உண்மைப் பொருள்களான பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் பதி உண்மை பற்றி இவ்வாய்வேட்டில் ஆராயப்பட்டுள்ளது. இம் மூன்று பொருள்களும் அநாதியானவை.சைவசித்தாந்தம் கூறும் பதியே சிவம் ஆகும்; அதுவே சிவன். “சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” எனகிறது திருமந்திரம். சைவத்தின் முழுமுதல் கடவுள் சிவன். அவனே பதி. அவனை அடையும் நெறியைக் கூறுவது சைவசித்தாந்தம். பசுவானது, பாசத்தை விட்டுப் பதியோடு ஐக்கியமாவது முத்தி; “சைவம் சிவானந்தம் சாயுச்சியமே” என்று திருமூலர் கூறும் பரமுத்தி; தற்பரம் கண்டுள்ள சைவசித்தாந்தர் பதியைச் சேரும் அடிசேர்முத்தி; அது “தாடலை” போல் கூடியிருக்கும் முத்தி. இம் முத்தியை உயிர்கள் பெறுவதற்கான பெருங்கருணை புரிவது பதி. உயிர்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப மாயாகாரியங்களான “மாயேயம்” எனப்படும் தனு கரண புவன போகங்களைக் கொடுத்துப் புசிக்கச் செய்வது பதி. அதன் மூலம் பக்குவமடைந்த நிலையில் உயிர்கள் பாச ஞானமும், பசு ஞானமும் நீங்கவே இருவினையொப்பு மலபரிபாகம், சத்திநிபாதம் பெற்று பதி ஞானம் கைவரப் பெறுகின்றன. தனது ஆணையாகி சத்தியோடு தாதான்மியமாக நின்று உயிர்களுக்குப் பதிஞானத்தைக் கொடுப்பது பதி. சிறப்பு நிலையாகிய சொரூபலக்கணமும் பொது நிலையாகிய தடத்தலக்கணமும் கொண்டு உயிர்களுக்கு அநுக்கிரகம் செய்வது பதி. அது சொரூபலக்கணத்தில் உருவின்றி அருவுமின்றி குணங்குறிகளின்றி அகண்டிதமாகச் சுத்த சிவமாக விளங்குவது; தடத்தலக்கணத்தில் முத்திருமேனிகளில் நவந்தருபேதம் கொண்டு இலயசிவனாக, போகசிவனாக, அதிகாரசிவனாக விளங்குவது; குருவாக வந்து திருவருள் கூட்டுவது. சற்காரியவாத அடிப்படையில் காரண காரியத் தொடர்பின்படி பதியானது பிரபஞ்சத் தோற்றத்திற்கும், நிலைத்தலுக்கும், ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணனாக விளங்குவது. சங்கார காரணனே முதல்வன் என்ற நிலையில் போற்றப்படுவது. சைவசித்தாந்தம் கூறும் இம் மேலான பதி, சர்வஞ்ஞனாக சர்வகர்த்திருத்துவனாக நின்று, குருவராக நின்று உயிர்களிடத்துத் திருவருள் பதியச் செய்கிறது. அவ்வுயிர்கள் உய்தி பெறும் பொருட்டு அவ்வுயிர்களைத் தானாகச் செய்கின்றது. சிவமாம் தன்மையாகிய பேரின்பத்தை அளித்து மலரடிக்கீழ் வைக்கும் சிவானந்தப் பேற்றைத் தருகிறது. இதுவே அத்துவித முத்தி ஆகும். எனவே சைவசித்தாந்தம் கூறும் பதியின் உண்மை நிலை, உயிர்கள் செய்த வினைகளுக்கேற்பதத் தனு கரண புவன போகங்களைக் கொடுத்து நுகரச்செய்து, பரிபாகம் உண்டாக்கி அவ்வுயிர்களைத் தானாக்கிவிடும் சிவபோக நிலையாகும்.இதுவே சைவசித்தாந்தம் கூறும் பதியின் உண்மை நிலை ஆகும்.

முக்கிய வார்த்தைகள்:
தற்பரம், மாயேயம், சங்காரகாரணன், சற்காரியவாதம், சகஸ்ரதளம், தாதான்மியம், தாடலை, சர்வஞ்ஞன், சர்வகர்த்திருத்துவம், அகண்டிதம், நிமித்தகாரகாரணன், அத்துவிதம், பாசஞானம், பசுஞானம், பதிஞானம்.

துணைநூற்பட்டியல்:
[1] அறிவொளி. அ. மெய்கண்டசாத்திரம், வர்த்தமானன் பதிப்பக வெளியீடு, சென்னை.
[2] இராமநாதபிள்ளை.ப. திருமந்திரம் மூவாயிரம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த (விளக்கவுரை) நூற்பதிப்புக்கழக வெளியீடு, சென்னை.
[3] ஐயர் ஏஏளு திருக்குறள் ஸ்ரீ இராமகிருஷ்ண தபோவனம், திருச்சிராப்பள்ளி. (நுபெடiளா வுசயளெடயவழைn 1984)
[4] சுந்தரமூர்த்தி தம்பிரான் திருத்தொண்டர்புராணம் - 2013 காசிமட வெளியீடு திருப்பனந்தாள.;
[5] சுப்பிரமணியம் ச. கந்தபுராணம் - யுத்தகாண்டம் சூரபத்மன் வதைப்படலம் 2014 (உரையாசிரியர்) அஷ்டலÑ;மி பதிப்பகம் கொழும்பு.
[6] ஞானசம்பந்தன் அ.ச. தேவாரத் திருப்பதிகங்கள் கங்கை வெளியீடு சென்னை. - 1998
[7] தண்டபாணிதேசிகர் ச. திருமூலர் திருமந்திரம் திருவாவடுதுறை ஆதீனம்.(உரையாசிரியர்) – 2014
[8] திருவிளங்கம் மு. சிவஞானசித்தியார் சுபக்கம் சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம். (புத்துரை) - 2010
[9] திருவிளங்கம் மு. சிவப்பிரகாசம் 1974 யாழ்ப்பாணம் கூட்டுறவு தமிழ்நூற் பதிப்பு (புத்துரை) விற்பனைக்கழகம், யாழ்ப்பாணம்
[10] பட்டுச்சாமிஓதுவார் தி. கந்தபுராணம் உரைநடை 1962 காசிமட வெளியீடு, திருப்பனந்தாள்.
[11] புலியூர் கேசிகன் திருக்குறள் புதியஉரை 2003 பூம்புகார் பதிப்பகம், சென்னை. (உரையாசிரியர்)
[12] வரதராஜன் பு. திருமந்திரம் 2014 பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. (உரையாசிரியர்)
[13] வீரவாகுப்பிள்;ளை எம். இ. திருவாசகம் 1957 ஒற்றுமை நிலையம், தியாகராய நகர். (எளிய உரை)
[14] வைத்தியநாதன் கு. சிவஞானபோதம் 2014 திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த பயிற்சிமையம் (தெளிவுரை) திருவாவடுதுறை.