அப்பர் தேவாரம் ஓர் அறிமுகம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-3
Year of Publication : 2023
Authors : Prof. Kalanithi, Prof. Kalanithi, Mrs. Vigneswari Bhavanesan


Citation:
MLA Style: Prof. Kalanithi, Prof. Kalanithi, Mrs. Vigneswari Bhavanesan, "An introduction to Upper Devaram" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I3 (2023): 17-25.
APA Style: Prof. Kalanithi, Prof. Kalanithi, Mrs. Vigneswari Bhavanesan, An introduction to Upper Devaram, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i3), 17-25.

சுருக்கம்:
திருநாவுக்கரசர் சைவசமய குரவர்கள் நால்வரில் ஒருவராகவும் அறுபத்துமூன்று நாயனமார்களுள் ஒருவராகவும் வைத்துப் போற்றப்படுவர். திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாமூரில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தவர். சைவசமயத்தின் பெருமைகளை உலகிற்கு நிலைநாட்டியதோடு சரியைத் தொண்டினைச் செய்து இறைவனடியை அடைந்தவர். பல சிவாலயங்களுக்குச் சென்று இறைவனது அருளை வியந்து, அதனையே நாடி, இயன்றவாறு அவனுக்கென்றே தொண்டு நெறிகளை அன்போடு அயராது செய்தவர். பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் திருநாவுக்கரசர் அருளியவை ஆகும். சேக்கிழார் பெருமான் சைவநெறி தான் பெற்ற புண்ணிமக்கள் இரண்டு என சம்பந்தரையும், அப்பரையும் போற்றுகின்றார். சிவஞான சுவாமிகள் காஞ்சிப்புராணத்தில் அப்பருக்கு இயற்றிய துதிப்பாடலில் அவரது தேவாரப் பாடல்களை ஞானப்பாடல் என்று அருளியுள்ளார். இவ்வகையில் அருந்தவத்தோர் நெறிவாழ அவதரித்த சைவநெறி பெற்ற புண்ணியக் கண்ணான அருந்தவமுனிவரின் ஞானப்பாடல்களை பகுப்பாய்வுமுறை, மற்றும் விபரண ஆய்வு முறையியல்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வின் மூலங்களாக அப்பர் பாடல்களான நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் ஆராயப்படுகின்றன.

முக்கிய வார்த்தைகள்:
அப்பர், தேவாரம், பாடல்கள், இறைவன்.

துணைநூற்பட்டியல்:
[1] அறிவுடை நம்பி.மா,“திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படும் இலக்கியக் கொள்கைகள்”, கருமணி பதிப்பகம், மதுரை, 1996, ப:8
[2] தணிகாசல முதலியார்.ஈஎன்,“அப்பர், கலாநிலையம் தொகுதி 2
[3] சீனிவாசபிள்ளை.கே,“தமிழ் வரலாறு”, ப:64 -73
[4] இராசமாணிக்கனார்.மா,“பெரியபுராண ஆராய்ச்சி, மாடல் பப்ளிகேசன்ஸ் சென்னை, 1948, ப:82
[5] சுப்பிரமணியபிள்ளை.கா,“இலக்கிய வரலாறு”, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 5ம் பதிப்பு, 1958, ப:335
[6] இராமச்சந்திரச் செட்டியார்,“திருநாவுக்கரசர் வரலாறு” சென்னை, 1962, ப:38
[7] வெள்ளைவாரணர், பன்னிரு திருமுறை வரலாறு, பகுதி 1, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1962,ப:376
[8] துரைசாமிப்பிள்ளை.சு, ஒளவை,“சைவ இலக்கிய வரலாறு”, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகா , 1958, ப:126
[9] சுப்பிரமணியன்.நா, கௌசல்யா சுப்பிரமணியன்,“இந்திய சிந்தனை மரபு”, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, 1996,ப:92
[10] இராமதாஸ்.எஸ்.ஆர்,“இந்தியப் பண்பாடு”, தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை,1990,ப:248