இந்துக்களின் வாழ்வியலில் பறை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-2
Year of Publication : 2023
Authors : Mr K. Atputhan


Citation:
MLA Style: Mr K. Atputhan, "Drum in Hindu Life" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I2 (2023): 36-43.
APA Style: Mr K. Atputhan, Drum in Hindu Life, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i2), 36-43.

சுருக்கம்:
பன்னெடுங்கால வரலாற்றினையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தினையும் தன்னகத்தே கொண்டு இந்துக்களது வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து வளர்ச்சி பெற்ற பல்வேறு கலைகளில் பறையிசையும் குறிப்பிடத்தக்கது. பறையானது இசைக்கருவியாக மட்டுமன்றி கற்கால மக்களின் தொலைத்தொடர்பு சாதனமாகவும் திகழ்ந்தது. இக்கலை வடிவமானது தற்காலத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுக்கின்றமையை காணமுடிகின்றது. இப்பாரம்பரிய கலைவடிவத்தினை வளர்த்துச் சென்ற இடங்களில் ஆலயங்களும் பெரும் பங்கு வகிக்கின்றது. அந்தவகையில் பறைக்கலைவடிவத்தினை இன்றைய நிலையில் வளர்த்துச் செல்வதற்கு ஆலயங்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்படுகின்றது என்;பது பற்றியும் இந்துக்களின் வாழ்வியலில் பறைக் கலைவடிவத்தினுடைய தாக்கம் பற்றியும் ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது. இவ்வாய்வானது முதல்நிலைத் தரவு இரண்டாம் நிலைத் தரவு எனும் அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. முதல்நிலைத் தரவாக பங்குபற்றல், அவதானம், நேரடிப்பார்வை, நேர்காணல் என்பனவாகவும் இரண்டாம் நிலைத் தரவாக புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையதளங்கள் அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
பறை, வாழ்வியல், இந்துக்கள், ஆலயங்கள், பாரம்பரியம்.

துணைநூற்பட்டியல்:
[1] பேராசிரியர்,மௌனகுரு.சி,(1998)“மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்”,மட்டக்களப்பு
[2] வளர்மதி.மு(2009),“பறையிசைக்கருவி ஓர் ஆய்வு”, சென்னை
[3] அம்ருதா பதிப்பகம்.
[4] தேநேயப்பாவாணர்,(1943), “இசைத்தமிழ்க் கிளர்ச்சி”, நளிசெந்தமிழ்ச் செல்வி
[5] தேனகம் சஞ்சிகை(2003),மட்டக்களப்பு பிரதேச செயலகம்
[6] hவவிளஃஃறறற.மநநவசர.உழஅஇiனெநஒஇpரி
[7] மட்டக்களப்பு இணையம்(31.5.20021), “ஈழத்தில் பறையிசை”,அயவவயமயடயிpர.உழஅ
[8] “பறைமேளக்கூத்தும் இன்றைய நிலையும்”,யசயலயஅpயவாi.டம
[9] “மட்டக்களப்பு பூர்வீகக் கலைகள் அந்நிய மோகத்தில் ஆடிப்போகும் ஆபத்து”, டியவவiநெறள.உழஅ
[10] “மட்டக்களப்பின் புகழ்பெற்ற பறைமேளக்கலைஞர்களின் கூத்து ஆற்றுகை”, ளயஅயமயடயஅ.உழஅ
[11] “பறைமேளக்கூத்து”,வய.அ.றமைமipநனயை.ழசப