நாட்டார் பாடல்களில் கிழக்கிலங்கைத் தமிழரின் வாழ்வியல் அம்சங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : S.K.Shivaganeshan, Shivaganeshan Sivadarsika


Citation:
MLA Style: S.K.Shivaganeshan, Shivaganeshan Sivadarsika, "Life Aspects of East Sri Lankan Tamils in Natar Songs" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 78-82.
APA Style: S.K.Shivaganeshan, Shivaganeshan Sivadarsika, Life Aspects of East Sri Lankan Tamils in Natar Songs, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 78-82.

சுருக்கம்:
இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் எனப்பட்ட இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் தமிழர்கள் வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்துவருகின்றனர். கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் 'மட்டக்களப்பு பூர்வசரித்திரம்' என்ற வரலாற்று நூல் பல சிறப்புக்களைக் கொண்டது. அந்நூல்குபேரன்காலம் முதல் கிபி. 16 ஆம் நூற்றாண்டு வரையான வரலாற்றை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையின் பிராந்திய வரலாற்றைக் கூறும் பல இலக்கியங்கள் காணப்பட்டாலும் இந்நூல் தனித்துவமான பல சிறப்புக்களைக் கொண்டது. இந்நூலினை எழுதியவர், அது எழுதப்பட்ட காலம் தொடர்பாக நூலில் குறிப்புகள் காணப்படவில்லை. கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் வாய்மொழி இலக்கியமாக விருந்து வந்தகதைகளை ஏடுகளாக தொகுக்கும் வழக்கம் ஒல்லாந்தரின் நிர்வாக தேவையாக அமைந்திருந்தது (பத்மநாதன்,2004:90) அவ்வாறு எழுதப்பட்ட நான்கு ஏட்டுச்சுவடிகளை கி.பி. 2005 ஆம் ஆண்டு வித்துவான் கமலநாதன் குழுவினர் அவ்வேடுகளில் குறிப்பிட்டுள்ள பெயரினைக் கொண்டே 'மட்டக்களப்பு பூர்வசரித்திரம்' என்ற பெயரில் நூலுருவாக்கம் செய்தனர் (கமலநாதன், 2005). கிழக்கிலங்கையின் வரலாற்றுச் செய்திகளை செய்யுள் மற்றும் உரைநடைவடிவில் இந்நூல் காட்டுகின்றது. செய்யுள் நடை நாட்டார் பாடல்கள் வடிவில் காணப்படுகின்றன. அச்செய்யுள் செய்திகள் ஊடாக கிழக்கு தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுச் செய்திகள் எந்தளவிற்கு வெளிப்படுத் தப்பட்டுள்ளன என்பதோடு, நவீன வரலாற்று ஆய்வில் இத்தகைய நாட்டார் இலக்கிய செய்யுள் செய்திகள் பெறும் முக்கியத்துவம் தொடர்பிலும் ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
பூர்வசரித்திரம், கிழக்கிலங்கை, வாழ்வியல், வாய்மொழி, சுவடி, நவீனம்.

துணைநூற்பட்டியல்:
[1] இந்திரபாலா.கா., 1980, 'நாட்டார்வழக்கியலும்இலங்கைத்தமிழர்வரலாறும்', சிவத்தம்பி.கா., (பதிப்பு), இலங்கைத்தமிழ்நாட்டார்வழக்கியல், யாழ்ப்பாணபல்கலைக்கழகம்.
[2] இந்திரபாலா.கா., 2021.11.27, 'கலிங்கமாகோன்பற்றியமுக்கியகல்வெட்டு, 'தமிழ்மீரர், கொழும்பு.
[3] கமலநாதன்.சி.,2005, மட்டக்களப்புபூர்வசரித்திரம், மட்டக்களப்பு
[4] தங்கேஸ்வரி.க.,2005, தமிழ் மன்னன் மாகோனின்மகத்தான பணி, மணிமேகலைப் பதிப்பகம், சென்னை.
[5] பத்மநாதன்.சி.,2004, ஈழத்துஇலக்கியமும்வரலாறும், குமரன்பதிப்பகம், கொழும்பு.
[6] Vansina.J.,1965,Oraltradition,London.