அறிஞர்கள் பார்வையில் எல்லாளன் - அன்றும் இன்றும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : Miss. Sutharsika Viknarasa, Mrs. Gowry Luxmykanthan


Citation:
MLA Style: Miss. Sutharsika Viknarasa, Mrs. Gowry Luxmykanthan, "Vachirakandan - Scholars view Ella - then and now" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 66-73.
APA Style: Miss. Sutharsika Viknarasa, Mrs. Gowry Luxmykanthan, Vachirakandan - Scholars view Ella - then and now, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 66-73.

சுருக்கம்:
புராதன இலங்கையின் அனுராதபுர இராசதானியில் ஆட்சி புரிந்த மன்னர்களுள் எல்லாள மன்னனைப் போன்று வேறு எந்தவொரு தமிழ் மன்னனும் பாளி இலக்கியங்களில் புகழப்பட்டிருக்கவில்லை. இவன் கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதி வரை இலங்கையின் தமிழ், சிங்கள மக்களால் போற்றுதலுக்குரிய அரசனாகக் கருதப்பட்டு வந்தான் என்பதற்கு பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. தீபவம்சம், மகாவம்சம், வம்சத்தபிரகாஸினி, தூபவம்சம், சத்தர்மலங்காரய என்பன எல்லாளனது சிறப்புக்களையும், அவனது நற்குணங்களுக்காக துட்டகாமிணி எழுப்பிய நினைவுத் தூபி பற்றியும் அதற்கு கொடுக்கப்பட்ட மரியாதைகள் பற்றியும் குறிப்பிடுகின்றன. எனினும் சுதந்திரத்திற்குப் பின்னர் (1948) நாட்டில் ஏற்பட்ட பெரும்பான்மையின ஆதிக்க உணர்வானது அரசியல் மற்றும் வரலாற்றைக் மாற்றியமைப்பதில் பெருஞ் செல்வாக்கை ஏற்படுத்தியது. இந்நிலை நீண்ட காலமாக வரலாற்றில் நேர்மைமிக்க சிறந்தவனாகப் பேசப்பட்டு வந்த எல்லாளன் பற்றிய பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், இம்மன்னனுக்கும் துட்டகாமிணிக்குமான ஆட்சியுரிமைப்போர் தமிழ்- சிங்கள மக்களிடையே காணப்பட்ட இனப் போராட்டமாக தவறான வடிவம் கொடுக்கப்பட்டது. பரணவிதான உள்ளிட்ட சில வரலாற்றாசிரியர்கள் இக்கருத்தினை வலுப்பெறச் செய்யத்தக்க ஆய்வுக் கருத்துக்களை முன்வைத்ததோடு, வழிபாட்டிற்குரிய எல்லாளனின் கல்லறையை துட்டகாமிணியின் கல்லறையாக அரச ஆதரவோடு மாற்றியமைத்தார்கள். எனினும் பரணவிதானவின் இக்கருத்தினை சிங்கள ஆய்வாளர்களர்கள் பலர் மறுத்தபோதிலும் அக்கருத்துக்கள் முன்னுரிமைப்படுத்தப்படவில்லை. 21 ஆம் நூற்றாண்டில் எல்லாளனை கொடியவனாகவும், சிங்கள மக்களின் விரோதியாகவும் வெளிப்படுத்தக்கூடிய மகாரஜ கெமுனு போன்ற திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களும் வெளிவந்தன. கஞ்சாயுத போன்ற விளையாட்டுக்கள் இளந் தலைமுறையினரிடையே அறிமுகம் செய்யப்பட்டன. இவை நீண்ட கால வரலாற்று நம்பிக்கையை தகர்த்து எல்லாளனை சிங்கள மக்களின் விரோதியாகக் காட்ட முனைந்ததன் வெளிப்பாடாகும்.

முக்கிய வார்த்தைகள்:
சமநீதி, எல்லாளன் சமாதி, இனப்போர்.

துணைநூற்பட்டியல்:
[1] இந்திரபாலா.கா., 2006, இலங்கையில் தமிழர் ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
[2] இரத்தினம்.தே., 1981, எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும், மறுமலர்ச்சிக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
[3] குணராசா.க., 2004, ஈழராஜா எல்லாளன், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
[4] சிறிவீர.ஐ., 1985, “துட்டகாமினி-எல்லாளன் எல்லாளன் வரலாற்று நிகழ்வு ஒரு மதிப்பீடு”, இனத்துவமும் சமூக மாற்றமும், சமூக விஞ்ஞானிகள் சங்கம், கொழும்பு.
[5] புஷ்பரட்ணம்.ப., 2000, இலங்கை தமிழ் மன்னர்களின் ஆட்சி ஒரு நோக்கு, கிருஷ்ணானந்தன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு பேருரை. யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
[6] Bimala Churn Law(E.d), 1970, Dipavamsa, The Ceylon Histrorical Journal, Vol-III, No.1-4, Colombo.
[7] Wilhelm Geiger(E.d), 1986, THE MAHAVAMSA, Asian Educational Services-New Delhi, Madras.
[8] ‘Elara’, News in Asia , 23. july .2016