அற இலக்கியங்களில் நட்பாராய்தல்: திருக்குறளையும், நாலடியாரையும் அடிப்படையாகக் கொண்டதோர் மதிப்பீடு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : N.Sudarshini


Citation:
MLA Style: N.Sudarshini, "The Investigation in forming Friendships in Tamil Ethical Literature: with Special reference to tirukkuṟaḷ and nalatiyar" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 33-40.
APA Style: N.Sudarshini, The Investigation in forming Friendships in Tamil Ethical Literature: with Special reference to tirukkuṟaḷ and nalatiyar, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 33-40.

சுருக்கம்:
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் நட்பு இன்றியமையாத உறவு எனலாம். சிறந்த நட்பு எக்காலத்திலும் விட்டுப் பிரயாது, எக்காலத்திலும் மாறாது, அத்தகைய நட்பு ஒருவரை நல்வழியில் இட்டுச்செல்லும். ஆனால், தீயவர்களோடு ஏற்படுகின்ற நட்பானது தீயவழியில் இட்டுச்செல்லும், அது நமது வாழ்க்கையை சீர்குலைத்துவிடும், நீண்டநாட்கள் நிலைத்து நிற்கும் இயல்பற்ற அத்தகைய நட்பு பல வகையிலும் வேதனைக்குட்படுத்திவிடும். ஏனெனில், ஒருமுறை ஒருவரோடு நட்பு கொண்டுவிட்டால் அவர்களைவிட்டு பிரிவது அத்துணை இலகுவான செயலாக இருக்காது. மாறாக மரண வேதனையைவிட அதிகமான வேதனையைத் தந்து செல்லும். ஆதலால் ஒருவரோடு நட்பு கொள்வதற்கு முன் ஆராய்ந்து அறிவது அவசியமாகிறது. சிறந்த நட்பால் பெருமையடைந்தோர் மத்தியில் ஆராயந்தறியாது நட்பு கொண்டு பல துன்பங்களை அனுபவித்துள்ள பலர் பற்றிய பல கற்பிதங்களையும் இலக்கியங்களிற் காணலாம். ஆதலால், ஒருவரை நம்முடைய நண்பராக்கிக் கொள்வதற்கு முன் அவரைப் பற்றி நன்கு ஆராய வேண்டும். இருப்பினும், நல்லதொரு நண்பனை அல்லது நண்பியைத் தெரிவு செய்து நட்பு கொள்வது என்பது எத்துணை தூரம் பொருத்தமானது, அது அறமாகுமா என்பது பற்றிய சிந்தனையும் மானிடர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இவ்வகையில், மானிட வாழ்க்கை செம்மையுற அமையும் வகையில் அறம்போதிக்கும் அறஇலக்கியங்களான திருக்குறள், நாலடியார் என்பன நட்பு கொள்ளும் முன்னர் ஆய்ந்து ஆராய்ந்து நட்பு கொள்ளுதலின் அவசியம் பற்றி வெளிப்படுத்துமாற்றினை அறியும் நோக்கோடு, ‘அறஇலக்கியங்களில் நட்பாராய்தல்: திருக்குறளையும், நாலடியாரையும் அடிப்படையாகக் கொண்டதோர் மதிப்பீடு’ எனும் தலைப்பில் நாலடியார், திருக்குறள் என்பவற்றை முதன்மை ஆதாரங்களாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
அறஇலக்கியங்கள், நட்பு, நட்பாராய்தல், திருக்குறள், நாலடியார்.

துணைநூற்பட்டியல்:
[1] சுப்புரெட்டியார்.ந., (2004), வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள், சென்னை: அவ்வை
[2] சௌரிராசன். பொன், (2005), திருக்குறளில் பொதுநிலை உத்திகள், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
[3] திருவள்ளுவர் - திருக்குறள்
[4] புலியூர்க்கேசிகன்., (1965), நாலடியார் தெளிவுரை, சென்னை; சாரதா பதிப்பகம்.
[5] புலியூர்க்கேசிகன்., (2010), இருபத்தி ஏழாம் பதிப்பு, திருக்குறள் புதிய உரை, சென்னை; பூம்புகார் பதிப்பகம்
[6] பழநிமாணிக்கம்,மொ., (ப.ஆ), (1991), தித்திக்கும் திருக்குறள் முத்துக்கள், தஞ்சை: திருக்குறள் பேரவை.