பன்மைத்துவ தேசம் ஒன்றில் இன முரண்பாடுகளுக்கான காரணிகளும் விளைவுகளும் தீர்வுகளும் -ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : Mr.M.T.M.Rizvi


Citation:
MLA Style: Mr.M.T.M.Rizvi, "Causes, Consequences and Remedies of Ethnic Conflict in a Pluralistic Nation-A Study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 20-32.
APA Style: Mr.M.T.M.Rizvi, Causes, Consequences and Remedies of Ethnic Conflict in a Pluralistic Nation-A Study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 20-32.

சுருக்கம்:
இலங்கை ஒரு பன்மைத்துவ தேசமாகும். பன்மைத்துவம் என்பது இனம், நிறம், மதம், மொழி, பண்பாடு, கலாசாரம் போன்ற இயல்பான காரணிகளால் வேறுபட்ட சமூகங்கள் ஒரு தேசத்தில் ஒன்றித்து வாழ்வதாகும். அப் பன்மைத்துவ சூழலில், அங்கு வாழும் ஓரு சமூகத்தவர், இனத்தவர், மதத்தவர் பிற சமூக, இன, மதத்தவர்களுடன் அவர்களது உரிமைகள், சுதந்திரம் பாதிக்கப்படாத விதங்களில் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும், சமாதானமாகவும் வாழ்வதை சகவாழ்வு எனப்படுகிறது.சமகாலத்தில் சமூகங்களிடையேயான பன்மைத்துவம், நாட்டின் அபிவிருத்திக்குரிய காரணியாக கொள்ளப்படுவதற்கு பகரமாக, பிளவுக்கும் பிரச்சினைக்குமான காரணியாகவும் சமூகங்களிடையேயான சக வாழ்வுக்கும் நாட்டின் அபிவிருத்திக்குமான தடைக்கற்களாகவும் மாறிவருகின்றது. இதனையே இங்கு ஆய்வுப்பிரச்சினையாக எடுத்துள்ளேன். தொடர்ந்தும் இந்நாட்டின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டு மோதல் நிலை நல்லதல்ல என்ற வகையில், முரண்பாடுகள் இயல்பானவை என்ற போதிலும் அதனைக் கையாளுவது எவ்வாறு என்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதும், சகவாழ்வை கட்டியெழுப்பி ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவதும் இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். மேலும் இஸ்லாத்தின் சகவாழ்வு தொடர்பான கருத்தியல் மற்றும் வரலாற்று அம்சங்களை வெளிக்கொண்டு வருவதன் ஊடாக பன்மைத்துவ இலங்கையில் சகவாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது உப நோக்கங்களாகும். இதற்காக பொது மறை அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சமய அடிப்படை நூல்கள்,ஆய்வுகளும் நேர்காணல்களும் முதற்தர மூலாதாரமாகவும். இணையத்தள தகவல்கள், ஆக்கங்களை இரண்டாம் நிலைத்தரவுகளாகவும் கொண்டு வரலாற்று, சமூகவியல், இனத்துவ, பண்புசார் ஆய்வு முறைமை இங்கு கையாளப்பட்டுள்ளது. இந்த எனது ஆய்வானது இஸ்லாமிய வழிகாட்டல்களிலும் இஸ்லாமிய பன்மைத்துவ நல்லாட்சி கால வராற்றிலும் பேணப்பட்ட சில சான்றுகளை இக்கட்டுரையில் முன்வைப்பதன் ஊடாக, பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறு பாடுகளுக்கு அப்பால், பன்மைத்துவ சூழல் மற்றும் மனிதம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு சகவாழ்வு எந்தளவு முக்கியத்துவமிக்கது என்பதை வெளிக்கொணருகிறது. மேலும் இலங்கையில் இடம்பெற்ற பல இன,மத முரண்பாடுகள், கலவரங்களால் ஏற்பட்ட விளைவுகளை சுட்டிக்காட்டுவதன் ஊடாகவும் இஸ்லாமிய ஆட்சிகால சில சகவாழ்வு வரலாற்றை முன்வைப்பதன் மூலமாக இன்றைய சகவாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தி, எதிர்காலங்களில் இப்பன்மைத்துவ தேசத்தில் முரண்பாடுகள், கலவரங்கள் ஏற்படாதிருப்பதற்கான முன்மொழிவுகளையும் தந்துள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
பன்மைத்துவம், முரண்பாடு, காரணி, விளைவு, தீர்வு.

துணைநூற்பட்டியல்:
[1] முகம்மது பாழில்,எம்.எ.ஸீ.(2018)சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை, கொழும்பு, அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வெளியீடு.
[2] தாஹா ஜாபிர் அல்வானி, (2017),முரண்பாடுகள் பற்றிய இஸ்லாமிய ஒழுக்க நெறிகள்இ ருளுயுஇஐஐஐவு வெளியீடு.
[3] அஹமத் அல் றைஸ_னி, (2016),அஷ்ஷ_றா கலந்தாலோசித்தல் பற்றிய குர்ஆனிய கோட்பாடு,ருளுயுஇஐஐஐவு வெளியீடு.
[4] ஹாரிஸ்,எச்.எல்.எம்.(2013)சகவாழ்வு சாத்தியப்படுவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும், இலங்கை, விஸ்டம் பப்லிசர்ஸ்.
[5] ஜோரஜ் ப்ரெக்ஸ்,.(2004),பல்வகையினைக் கையாளுதல் இலங்கையில் சமாதானமும் முரண்பாடும் பற்றிய சொல்லாடல்நெதர்லாந்து. சர்வதேச உறவுகள் நிலையம்.
[6] அனஸ்,எம்.எஸ்.எம்.,அமீர்தீன்,வீ.வஸீல்,ஏ.ஜே.எல்.(2003),இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும் சிங்கள – முஸ்லிம், தமிழ் - முஸ்லிம் இன வன்முறைகளும் இன உறவுப் பிரச்சினைகளும் 1915 முதல் 2002 வரை ஓர் ஆய்வு,கொழும்பு.
[7] முகம்மது சமீம், (1997),ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள். இலங்கை, குமரன் பப்ளி ஷரஸ்.
[8] அப்துல் கறீம்,மு.(1996),இஸ்லாமும் சமய நல்லிணக்கமும், திண்டுக்கல்,ஆயிஸா பதிப்பகம்.