தண்டலையார் சதகம் உணர்த்தும் தனிமனித அறக்கூறுகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-1 Year of Publication : 2023 Authors : M. Vadivel, Dr. R. Mallika |

|
Citation:
MLA Style: M. Vadivel, Dr. R. Mallika, "Thandalaiyar Sathagam embodies the individual virtues" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 1-6.
APA Style: M. Vadivel, Dr. R. Mallika, Thandalaiyar Sathagam embodies the individual virtues, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 1-6.
|
சுருக்கம்:
இலக்கியம் என்பது மக்களின் வாழ்கையிலிருந்து பிறந்து, அதனை தெளிவுப்படுத்தி மீண்டும் அம்மக்களின் வாழ்க்கையைச் செம்மையுறச் செய்வதாக அமையப்பெறுகிறது. அவ்வகையில் தண்டலையார் சதகத்தில் காணலாகும் தனிமனித அறக்கூறுகள் வாழ்வினை செம்மைப்படுத்துகின்றன. தனிமனித வாழ்வில் கல்வியின் பங்களிப்பென்று பார்க்கும்போது ஒரு மனிதனுக்கு அழகினையும் புகழினையும் தேடித்தருவதாக அமைகிறது. அறிவுடைய மாண்புள்ளவர்களாகத் திகழ கல்வி வழிவகைச் செய்கிறது. இக்கல்வியறிவின் வாயிலாக மற்ற பிற உயிர்களுக்கு கொடுந்துன்பங்களை ஏற்படுத்தாமல் வாழ்வதே நலம் பயக்கும். பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்கும் பாவச்செயல்களைச் செய்தால் பிற்காலத்தில் நம்மையே வந்துச்சேரும் என்ற அடிப்படைத் தத்துவத்தை இக்கல்வி உணர்த்துகிறது. ஒருவர் மற்றொருவர் மீது காட்டும் அன்பும் அக்கறையும் வாழ்வில் புரிதலை ஏற்படுத்தக்கூடியது. இன்னாருக்கு இன்னன்ன செய்யவேண்டும் என்ற மனப்பக்குவத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். பொறுமை என்ற பேராயுதமே மனித வாழ்வினை தக்க இடங்களில் நிலைநிறுத்தும். பொறுமை குணத்தால் ஒரு மனிதன் பிறருக்குச் செய்யக்கூடிய செயலும் உதவியும் எவ்வகையாயினும் அறம் என்ற சொல்லால் சிறந்த பண்பு நிறைந்த சான்றோன் என அழைக்கப்படுகின்றான். மேலும் பொறுமை குணத்தால் எவ்வித எதிர்ப்பையும், தீயவர்களின் செயல்களையும் எதிர்த்து வெற்றி பெறுமுடியும். பொறுமை குணம் உள்ள மனிதனே அரசாள முடியும். தீமை தரக்கூடிய வழிகளான துன்பம் செய்தல், பொய் பேசுதல் போன்ற வழியில் பயணித்தல் சிறப்பாகாது. அனைவருக்கும் நன்மையை மட்டுமே செய்து அறத்தைப் போற்றிக் காத்தல் வேண்டும் என்ற தனிமனித அறக்கூறுகளை தண்டலையார் சதகம் எடுத்து செப்புவது வியப்புடையதாக அமைகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: கல்வி, பொறுமை குணம், அறம், சான்றோன்.
|
துணைநூற்பட்டியல்:
[1] கதிர் முருகு.டாக்டர் (2016), படிக்காசுப் புலவரின் பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை – 14 தமிழ்நாடு, இந்தியா.
[2] கதிர் முருகு.டாக்டர் (2013), அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை – 14, தமிழ்நாடு, இந்தியா.
[3] வளன் அரசு.பா, திருக்குறள் விளக்கம், சூர்யா பதிப்பகம், திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா – 627001
[4] நல்வழி
|