கண்டி இராசதானிக்கும் மட்டக்களப்புக்குமான தொடர்பு (வாய்மொழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal Volume-4 Issue-4 Year of Publication : 2022 Authors : Mrs.Christina Nirogini Mosesruben, Mrs. Gowry Luxmykanthan |

|
Citation:
MLA Style: Mrs.Christina Nirogini Mosesruben, Mrs. Gowry Luxmykanthan, "Correlation of Kandy Rasatani and Batticaloa (A Study Based on Oral Narratives)" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I4 (2022): 43-53.
APA Style: Mrs.Christina Nirogini Mosesruben, Mrs. Gowry Luxmykanthan, Correlation of Kandy Rasatani and Batticaloa (A Study Based on Oral Narratives), International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i4), 43-53.
|
சுருக்கம்:
தொல்லியல் ஆய்வுகள் அதிகளவில் மேற்கொள்ளப்படாத மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றைக் கட்டமைப்பதில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. எனினும் இப்பிரதேச மக்கள் மத்தியில் ஏராளமான வாய்மொழிக் கதைகள் கூறப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அக்கதைகளில் பல வரலாற்றுத் தகவல்கள் பொதிந்துள்ளபோதிலும் முழுமையாக அவற்றை வரலாற்று மூலாதாரங்களாகக் கருத முடியாது. வரலாற்று ஆராய்ச்சியில் மரபுவழிக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இதன் பின்னணியில் மட்டக்களப்பில் வழக்கிலுள்ள கண்டி இராசதானி தொடர்பான வரலாற்றுக் கதைகள் சார்பு நிலைப்பட்டதாக காணப்படுகின்றமையை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு சமகால இலக்கிய, தொல்லியற் சான்றுகளின் உதவியூடாக வாய்மொழிக் கதைகளில் பொதிந்துள்ள வரலாற்றுண்மைகளை வெளிப்படுத்துவதாக இவ்வாய்வு கட்டமைக்கப்படுகின்றது. கண்டி இராசதானிக்கும் மட்டக்களப்பிற்குடையிலான அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தொடர்புகளைக் கண்டறிந்து மத்திய கால மட்டக்களப்பு தேசத்தின் வரலாற்றம்சங்களை வெளிப்படுத்தல் இவ்வாய்வின் நோக்கமாகும். களவாய்வுகள் மூலம் பெறப்பட்ட கதைகளை இலங்கை வரலாறு கூறும் பாளி, தமிழ், சிங்கள இலக்கியங்கள், தொல்லியற் சின்னங்கள், வெளிநாட்டார் குறிப்புகள் என்பவற்றுடன் ஒப்பு நோக்கி உண்மைகளைக் கண்டறிந்து, படிப்படியாக வரலாற்றை ஆராய்ந்து கண்டறிகின்ற வரலாற்று அனுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்த்துக்கேயரது காலத்தில் கண்டி இராசதானியின் மேலாட்சியை ஏற்றுக்கொண்ட வன்னிச் சிற்றரசர்களால் ஆளப்பட்ட ஆட்சிப் பிரிவாகவே மட்டக்களப்பு காணப்பட்டுள்ளது. இங்கு அவர்களது வாசஸ்தலமும் அமைந்திருக்கின்றது என்ற முடிவிற்கு வரமுடிகின்றது. ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் காலத்தில் மட்டக்களப்புடன் கண்டிக்கிருந்த தொடர்பை வெளிப்படுத்துவதாகவே இம்மன்னன் பற்றிய கதைகள் இப்பகுதிகளில் காணப்பட்டமையைக் கூறமுடியும்.
|
முக்கிய வார்த்தைகள்: வாய்மொழிக் கதைகள், வன்னிமை.
|
துணைநூற்பட்டியல்:
[1] Vansina,J., Oral Tradition- A Study in Historical Methodology, Chicago: Aldine Pub. Co, 1969.
[2] Tylor.E.B., Primitive Culture, America, 1874.
[3] Robert Knox, An Historical Relation of the Island Ceylon, R. Chiswell, 1681.
[4] Silva.K.M.De., A History of Sri Lanka, Vijitha Yapa Publications, Colombo, 2003.
[5] கமலநாதன்.இ.சா., மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னைஇ 2005.
[6] சந்திரசேகரம்.சி., இலங்கைத் தமிழ் நாட்டார் கதைகள், குமரன் புத்தக இல்லம்இ கொழும்பு, 2020.
[7] தங்கேஸ்வரி.க., கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு, மணிமேகலை பிரசுரம், சென்னை. 2007.
[8] வெல்லவூர் கோபால்இ மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம்இ மனுவேதா வெளியீடுஇ 2011.
[9] புவனகேசரி - வயது 65.
[10] தெய்வேந்திரன் - வயது 72.
|