Citation:
MLA Style: Dr.A. Kirupairajah, "Contribution of Devaradiyars in Eelam Temples" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I4 (2022): 1-4.
APA Style: Dr.A. Kirupairajah, Contribution of Devaradiyars in Eelam Temples, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i4), 1-4.
|
சுருக்கம்:
பண்டைத் தமிழகத்தில் இருந்த ஆலயங்களில் ஆடல்மகளிர் அமர்த்தப்பட்டு அவர்கள் ஊடாக ஆடற்கலை மேற்கொள்ளப்பட்டுவந்தது. குறிப்பாகபல்லவர் காலத்தில் தோன்றியபக்தி இயக்கம் ஆலய வழிபாடுகளிலும் விழாக்களிலும் ஆடற்கலை ஒர் அம்சமாகபுகுத்தப்பட்டதன் விளைவாக ஆலயங்கள் தோறும் ஆடல் மகளிரின் தேவைஉணரப்பட்டது. இதனால் ஆலயங்கள் தோறும் தேவதாசிப் பெண்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஆடற்கலையானது வளர்க்கப்பட்டுவந்தது. இதற்காகமன்னர்கள் தங்களாலான முயற்சிகளையும் அவர்களிற்கான கொடைகளையும் வழங்கிவந்தனர். இத்தகைய பின்னணியிலேயே ஈழத்து ஆலயங்களிலும் ஆடல் கலைப்பணிக்காக நோக்கமாகக் கொண்டு தேவரடியார்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.
பரதநாட்டியவளர்ச்சியில் ஆடல் மகளிரின் பங்குமுக்கியமான இடத்தினைவகிக்கின்றது. தேவரடியார் என்னும் பதம் தேவனுக்கு - இறைவனுக்கு தெய்வத் தொண்டு செய்யும் பெண் எனப் பொருள்படும். இவர்கள் பரதநாட்டியகலையைபயின்று முற்காலத்தில் கோவில்களில் பிற இடங்களிலும் ஆடினார்கள். இசை, நடன, அழகியல், சமய, சமூகவியல் மரபேதேவதாசிகள் முக்கியமான ஓரிடத்தினைவகித்துள்ளனர்.
ஈழமெனப்படும் இலங்கையுடன் இந்திய நாடு பல துறைகளிலும் தொன்று தொட்டுத் தொடர்புடையதாக இருந்துவந்துள்ளது. அதில்; நடனக்கலை ஒரு அங்கமாககுறிப்பிடலாம். ஆதிகாலத்தில் இருந்து ஈழத்து ஆலயங்களிலும் தேவரடியார்களின் ஆடற்கலைபணிநடை பெற்றது என்பதற்கு பல ஆவணங்கள், சான்றுபகர்கின்றன. இவ் ஆதாரங்;களில் இருந்து ஈழத்து ஆலயங்களில் தேவரடியார்களின் பங்களிப்பினை இனங்காண்பதே இவ்வாய்வின் நோக்கம் ஆகும்
ஈழத்தில் பரதநாட்டியம் அறிமுகம் மாவதற்கு ஈழத்து ஆலயங்களில் ஆடல் பணியாற்றிய தேவரடியார்களே காரணமாக இருந்துள்ளார்கள் என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும். இவ்வாய்வானது வரலாற்று ஆய்வு முறையை பின்பற்றி உள்ளது. ஈழத்தில் சோழர் மன்னர்களது ஆட்;சியிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஈழத்து ஆலயங்களில் தேவரடியார்களின் பங்களிப்பே ஆய்வின் எல்லையாக எடுத்து கொள்ளப்படுகின்றது. ஆய்வு மூலங்களாக, மகாவம்சம், சூழவம்சம், தச்சனகைலாயபுராணம், யாழ்ப்பாணவைபபமாலை, கனகிபுராணம் போன்ற நூல்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றது இவ்வாய்வின் பயன்பாடாக ஆரம்பகாலத்தில் ஈழத்துஆலயங்களின் தேவரடியார்களின் கலைப்பணி முக்கியத்துவம் வாய்ந்தது தொன்றாககாணப்பட்டு உள்ளது என்பதையாவரும் தெரிந்து கொள்வதற்கு இவ்வய்வு பயனுடையதாக அமையும்.
|
துணைநூற்பட்டியல்:
[1] கிருஸ்ணராசா.செ., இலங்கைவரலாறு,பகுதிஐபிறைநிலாவெளியீடு, இலங்கை 1999.
[2] குணராஜா.கா.,மகாவம்சம் தரும் இலங்கைசரித்திரம்,கமலம் பதிப்பகம். இலங்கை2003.;,
[3] நிக்கலலஸ்.டீ.நு., இலங்கைச் சரித்திரம்,ஆசிரிவாதம் அச்சகம், இலங்கை 1966.
[4] பாஸ்கரதாஸ்.ஆ., இலங்கைதிருநாட்டின் இந்துக்கோயில்கள், இந்தசமயதிணைக்களம், இலங்கை 2012.
[5] புஷ்பரட்ணம். ப. பேராசிரியர்,ஈழத்தமிழர் மரபுரிமைஅடையாளங்கள்,தமிழ்க்கல்விச்சேவைசுவிற்சர்லாந்து, 2017
[6] பத்மநாதன்.சி.,பொலனறுவைசைவ வைஸ்ணவதிருக்கோயில்களின் சிற்பங்களும் படிமங்களும், மகாஜனாக் கல்லூரி, இலங்கை 2013.
[7] குணராஜா.கா., சூளவம்சம் கூறும் இலங்கைவரலாறு,யுனிஆட்ஸ் லிமிற்ரட்இலங்கை 2008.
[8] நவரத்தினம்.க., இலங்கைகலைவளர்ச்சி,ஈழகேசரி, இலங்கை 1954.
[9] சிங்கைசெகராஜசேகரம்,தட்சிலகையாலபுராணம்,பகுதிஐஐ இந்துசமயஅலுவலகர் திணைக்களம், இலங்கை 1995.
[10] அருட்பிரகாசம், (1921)வையாபாடல்,இலங்கை
[11] சபாநாதன், (1951)யாழ்ப்பாணவைபவமாலை, இலங்கை
[12] நட்டுவச்சுப்பையனார்,கனகிபுராணம்,சுதந்திரன் அச்சகம், இலங்கை 1962.
|