சிந்துவெளி கட்டடக்கலையும் இந்து கட்டடக்கலை மரபுகளில் அவற்றின் செல்வாக்கும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-3
Year of Publication : 2022
Authors : Mrs. Prashanti Ilango


Citation:
MLA Style: Mrs. Prashanti Ilango, "Indus Valley Architecture and Their Influence on Hindu Architectural Traditions" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I3 (2022): 79-87.
APA Style: Mrs. Prashanti Ilango, Indus Valley Architecture and Their Influence on Hindu Architectural Traditions, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i3), 79-87.

சுருக்கம்:
ஒவ்வோரு சமூகங்களிலும் வாழும் மக்கள் தமது வாழ்க்கை அனுபவங்கள் மூலம் அடைந்த அறிதல்களை தொகுத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் விதத்தில் அவற்றைத் தகவல்களாகத் தொகுத்துக் கொடுப்பது தொன்மத்தின்பாலடங்கும் “ ஒரு சமூகத்தின் மொத்த சிந்தனை ஆற்றலின் வெளிப்பாடே தொன்மங்கள்” என்கிறார் மார்சிம் கார்கி. ஆய்வுகள் மூலம் இந்து நாகரிகத்தின் தொன்மை பற்றி அறியத்தரும் முதலாவது காலப்பகுதியாக விளங்குவது கி.மு . கி.மு 7000 – கி.மு 2000 வரையான சிந்துவெளிக்காலம். ஒரு நாட்டின் நாகரீகத்தின் வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டும் கட்புலக் கருவிகளாக கட்டடக்கலையையே அறிஞர்கள் விபரித்துள்ளனர். “படிப்பினையாக முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்லும் எல்லா விடயங்களும் தொன்மங்கள்தான்”; எனும் இந்திய இதழியலாளரும் எழுத்தாளருமான நிவேதிகா லூயிஸ் கூற்றிற்கு இணங்க சிந்துவெளி மக்கள் தாம் அறிந்துகொண்ட அறிவியல் சார்ந்த படிப்பினைகளையும் நிறைவாக வாழ்ந்த வாழ்க்கை முறைகளையும் சமய நம்பிக்கைகளையும் அவர்தம் கட்டடக்கலை மரபுகளினூடாக விட்டுச் சென்றுள்ளனர். தொன்மைக் காலத்திலேயே மிகக் கவனமுடன் திட்டமிடப்பட்டு நுணுக்கமும் நேர்த்தியும் வாய்ந்ததாக உருவாக்கப்பட்ட நகர அமைப்புகளும், தெளிந்த விண்ணியல் ஞானத்துடன் அடிப்படைத் திசையமைப்புகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட நகரத் திட்டமிடல்களும், நோய் தீர்க்கும் நீரியல் சார்ந்த வைத்திய முறைகளைத் தன்னகத்தே கொண்டமைக்கப்பட்ட நீராடும் பொய்கைகளும், பிரத்தியேகம் பேண அமைக்கப்பட்ட உடைமாற்றும் அறைகளும், வைத்திய முறைகொண்டு அமைக்கப்பட்ட வெப்பக்குளியல் மேடைகளும், தானியக் கோணிகள் பழுதடையாமல் பாதுகாப்பு நுட்பங்களுடன் அமைக்கப்பட்ட களஞ்சியசாலைளும், வெண்கலச் சூளைகளும் தத்தம் கட்டட அமைப்புக;டாக அக்கால மக்களின் அறிவியல், சமய சாஸ்திர தொன்மங்கள் பலவற்றை வெளிப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இக்கட்டடங்களுள் இந்துக்கோயில்கள் இருந்தமை பற்றித் திட்டவட்டமான, கட்புலரீதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத போதும் பல ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் பகிரும் கருத்துக்களும் ஆய்வின் போது கிடைத்த சிற்ப, ஓவிய வடிவங்களும,; சிந்துவெளியிலே இந்துமதமும் கோயில்களும் இருந்தமையையும் சமகால தென்னிந்திய கோயில் கட்டடக்கலை வளர்ச்சிக்கு அவை அடிப்படைகளாக அமைந்திருப்பதையும் அறிய முடிகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
தொன்மங்கள், பொய்கைகள், தானியக் கோணிகள், நகரத்திட்டமிடல், களஞ்சியங்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] பரராஜசிங்கம் . க. சிந்துவெளி நாகரிகமும் தமிழரும். 2017. மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம்
[2] சுந்தரம்பிள்ளை. சே. இந்துநாகரிகத்தில் கலை. 1994. பாரதி பதிப்பகம். யாழ்ப்பாணம்.
[3] சுவாமிநாதன். ஆ. சிந்துவெளிக் குறியீடுகள். 1994. சென்னை அராய்ச்சியாளர் மையம்.
[4] ஞானி. தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள். 1994. நிகழ் வெளியீடு
[5] இராசமாணிக்கனார். மா. மொகஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம். (1997) கழகவெளியீடு
[6] இந்துநாகரீகம் - தரம் 12. மாணவர்களுக்கான வளநூல். தேசியகல்வி நிறுவகம். மகரகம.