வட இலங்கையில் சமாதானத்திற்கான அரங்கு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-3
Year of Publication : 2022
Authors : Thevanayagam Thevananth


Citation:
MLA Style: Thevanayagam Thevananth, "Theatre for peace in Northern Srilanka" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I3 (2022): 66-78.
APA Style: Thevanayagam Thevananth, Theatre for peace in Northern Srilanka, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i3), 66-78.

சுருக்கம்:
இலங்கையில் 2002 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளும் நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்.ஓ.யு) கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து நீண்ட உள்நாட்டுப் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 2005ல் பொறுப்பேற்றதன் பின் நெருக்கடிக்குள்ளானது. இந்தக்காலகட்டத்தில் இரண்டு தரப்பினரும் போர்நிறுத்தத்தை பயன்படுத்தி தங்கள் ஆயுத பலத்தை வலுப்படுத்திக் கொண்டனர். 2006 இல், மோதல் மீண்டும் வெளிப்படையாகத் தோன்றும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. 2002 – 2006 சமாதான உடன்படிக்கை நடைமுறையிலிருந்த காலகட்டத்தில் ‘கரைதேடும் ஓடங்கள் ‘நாடகம் மேடையேற்றப்பட்டது. நிலைத்த சமாதானத்துக்காக இலங்கையில் இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. ‘கரைதேடும் ஓடங்கள்’ நாடகம் சமாதான உடன்படிக்கை நடைமுறையிலிருந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டதாலும், நிலைத்த சமாதானம் பற்றிய ஆழமான கருத்துக்களை முன்வைப்பதாலும் இது ‘சாமாதான அரங்கு’ என்ற வரையறைக்குள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. ‘கரைதேடும் ஓடங்கள்’ நாடகத்தை சமாதானத்திற்கான வரையறைக்குள் வரமுடிகிறதா? அல்லது அதனை மீறுகிறதா? ஏன்ற விடயங்கள் விமர்சன உரைப்பகுப்பாய்வு முறையினூடாகத் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நோக்கப்படுகின்றது. உண்மையில் கரைதேடும் ஓடங்கள் நாடகம் ‘கூட்டு சமூக ஆற்றுப்படுத்தல்’ பணியைச் செய்கிறது எனலாம். கடந்தகால துயரங்களை தாக்கவன்மையாகக் காட்டுவதன் மூலம் அதற்குக்காரணமானவர்களை இனங்காட்டி அந்த அதிகார உறவுகளை பார்வையாளர்கள் உணரும் வகை செய்கிறது. இதனால் சமாதான காலத்தின் அமைதி நிலையற்றது என்பதை வலியுறுத்தி அதனை சவாலுக்குட்படுத்துகிறது. இந்த நாடகத்தை புதுவை அன்பன் எழுதி நெறிப்படுத்தியிருந்தார். ஈழநாடக வரலாற்றில் புதுவை அன்பன் என்ற நாடகக்கலைஞர் விடுதலைக்கான அரங்கில் தாக்க வன்மையுடன் ஈடுபட்டு வந்தவர். அவர் , சமாதானத்திற்கான அரங்க நாடகத்தையும் படைக்க முயற்சித்திருக்கிறார். விடுதலைக்கான அரங்கென்பது நிலைத்த சமாதானத்திறகான முயற்சி என்பதை இந்த இரண்டு அரங்கச் செயற்பாடுகள் ஊடாக புதுவை அன்பன் வெளிப்படுத்துகிறார்.

முக்கிய வார்த்தைகள்:
சமாதானத்திற்கான அரங்கு, விடுதலைக்கான அரங்கு, இலங்கைத் தமிழ் அரங்கு, யுத்தகால அரங்கு, உளசமூக மேம்ப்பாட்டு அரங்கு.

துணைநூற்பட்டியல்:
[1] Moreno, J. L. (1947). The social atom and death. Sociometry, 10(1), 80-84.
[2] Agathangelou, A. M., & Ling, L. H. (2009). Transforming world Allegory to Political Commitment. Derrida Today, 1(1), 76-94.
[3] Frerks, G. (2013). Discourses of war, peace and peacebuilding in Sri Lanka. In Disaster, Conflict and Society in Crises (pp. 35-53). Routledge.
[4] Frerks, G. E., & Klem, B. (2004). Dealing with diversity, Sri Lankan discourses on peace and conflict. Clingendael Institute of International Relations.
[5] Grotowski, J., 2012. Toward a Poor Theater. Taylor & Francis, Oxford.
[6] Hazou, R. T. (2012). ACTING TOGETHER: PERFORMANCE AND THE CREATIVE TRANSFORMATION OF CONFLICT. VOLUME I: RESISTANCE AND RECONCILIATION IN REGIONS OF VIOLENCE. Australasian Drama Studies, (61), 193.
[7] http://en.wikipedia.org/wiki/Jana_Natya_Manch Wikipedia. (2013, September 10). Theatre http://en.wikipedia.org/wiki/Theatre_of_the_Oppressed
[8] IN REGIONS OF VIOLENCE. Australasian Drama Studies, (61), 193. In Handbook of Ethnic Conflict (pp. 93-118). Springer, Boston, MA.
[9] Jennings, S. (2014). Dramatherapy: Theory and practice 1. Routledge.
[10] Mda, Z. (2020). When people play people. In The applied theatre reader (pp. 193-199). Routledge.
[11] Mel, N. D., Samuel, K., & Soysa, C. K. (2012). Ethnopolitical conflict in Sri Lanka: Trajectories and transformations. In Handbook of Ethnic Conflict (pp. 93-118). Springer, Boston, MA.
[12] Moreno, J. L. (1940). Mental catharsis and the psychodrama. Sociometry, 3(3), 209-244.
[13] Obeyesekere, R. (1999). Sri Lankan theater in a time of terror: Political satire in a permitted space. SAGE Publications Pvt. Limited.
[14] Premaratna, N. (2018). Theatre for peacebuilding. In Theatre for Peacebuilding (pp. 65- 103). Palgrave Macmillan, Cham.
[15] Ross, A. (2008). Derrida's Writing-Theatre: From the Theatrical Allegory to Political Commitment. Derrida Today, 1(1), 76-94.
[16] Thompson, J. (2005, April). Theatre of pain, Theatre of beauty. In Researching Drama and Theatre in Education Conference, University of Exeter.
[17] புதுவை அன்பன். (2004, ஜனவரி – யூன் )போராட்ட வாழ்வே அரங்காக..., கட்டியம் :உலகத் தமிழர் ஆய்விதழ், பக் 87-103.
[18] தேவானந்த்,தே. (2004, பெப்ரவரி, 19) விடுதலைக்கான அரங்கு உண்மையில் ஒன்று அல்ல,ஈழநாதம், பக் 26-28.
[19] சிவத்தம்பி,கா.(1995) நாடக ஆக்கமும் அரங்கின்’அழகியலும்’ சமூக மாற்றம் பற்றிய ஆழமான கருத்து நிலைப் பிரச்சினை மையமாக மேற்கிளம்பும் செயல் முனைப்பு நிலை.சிதம்பரநாதன்.க, சமூகமாற்றத்துக்கான அரங்கு( இரண்டாம் பதிப்பு)