இலங்கையின் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்: ஒரு சிறுபான்மைக் கண்ணோட்டம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-3
Year of Publication : 2022
Authors : A. Kanneraj


Citation:
MLA Style: A. Kanneraj, "The 2019 Presidential Election of Sri Lanka: A Minority Perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I3 (2022): 29-36.
APA Style: A. Kanneraj, The 2019 Presidential Election of Sri Lanka: A Minority Perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i3), 29-36.

சுருக்கம்:
2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலானது பல்வேறு வகைகளிலும் கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமானதாக அமைந்திருந்தது. இவற்றில் முக்கியமானது, ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வகிபாகத்தை கேள்விக்கு உட்படுத்தியிருந்தமையாகும். இவ்விடயத்தினை ஆய்வுப் பிரச்சினையாகக்கொண்டு,“குறித்த தேர்தலில் ஜனாதிபதியினைத் தெரிவுசெய்வதில் சிறுபான்மை மக்களின் வகிபாகம் எவ்வாறு அமைந்திருந்தது” என்பதனை அறிந்து கொள்வதனை நோக்கமாகவும் கொண்டு, இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது, ஒரு கலப்பு ஆய்வு முறையியல் அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு வகையான தகவல்களும்முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. இவ்வகையில் பெறப்பட்ட தரவுகள்விவரணப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு, ஆய்வின் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவாக நடைமுறையில் இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலானது பெரும்பான்மை இனத்தினரால் மாத்திரம் தனித்து ஜனாதிபதியினைத் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகளைக்கொண்டுள்ளது. அதேவேளை, நாட்டில் நிலவுகின்ற இனரீதியான பிளவே இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. மறுபுறம் பெரும்பான்மைத் தத்துவத்தினடிப்படையில் செயற்படும் ஜனநாயகமும் இலங்கை போன்ற சமாந்தரமற்ற வகையில் இனப்பரம்பலைக் கொண்டுள்ள நாடுகளில் இனரீதியான ஆதிக்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.பெரும்பான்மைத் தத்துவத்தின் தவறான புரிதலே இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய நிலைமைகள் ஏற்படுவதற்குக் காhரணமாக அமைவதினையும் இவ்வாய்வானது சுட்டிக்காட்டுகின்றது. மேற்படி குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு, ஜனாதிபதித் தெரிவில் சிறுபான்மையினரின் அபிப்பிராயங்களையும், வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளர்ஒரு குறித்த விகிதாசார அளவில் பெற்றுக்கொள்ளுதல் அவசியம் என்கின்ற வகையில் தெரிவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்துதல் மற்றும்பன்மைத்துவ ஜனநாயகத்தின் அவசியத்தையும் இவ்வாய்வு பரிந்துரைகளாக முன்வைக்கின்றது.

முக்கிய வார்த்தைகள்:
ஜனாதிபதி தேர்தல், சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை மக்கள், தேர்தல் முறைமை, பிரதிநிதித்துவ முறைமை.

துணைநூற்பட்டியல்:
[1] Jay. S, 2015, Politics, Power and Purpose: An Orientation to Political Science, [Online] FHSU Digital Press, URL Available on: https://fhsu.pressbooks.pub/orientationpolisci/
[2] Jayadeva. U, 2019, Sri Lanka’s Presidential Election: Healing the wound in the new Task, URL Available on: https://groundviews.org/ 2019/11/19/sri- lankas-presidential -election-healing -the-wounds- is-the-new-task/
[3] Misha K, 2019, Sri Lanka: Gotabays Rajapakasa’s election victory sparks fear among minorities, URL Available on: https://theconversation.com/ sri-lanka-gotabaya- rajapaksas-election -victory-sparks- fear-among- minorities-127302
[4] Oguz. H, Sefa. C & Erol. T, 2019, Pluralism and Democratic Theories: Fundations and Challenges, URL Available on: https://www.researchgate.net/ publication/
[5] Vaihaishelvan>2019>People in a democrative election!>Dinamani>URLAvailable from: https://www.dinamani.com/ editorial-articles/ center-page- articles/2019/
[6] Rahuman>2019>The contribution of the minority population to this victory of the president election>URL Available on: https://www.madawalaenews.com /search?updated -max=2019-11 -23T09:45: 00% 2B05: 30&max- results=25&m=1
[7] Manihavasaham> 2020>An End to the miniority issue>URLAvailable on:http://aruvi.com/article/tam/2020/01/06/6332/
[8] Foreign Ministory of Sri Lanka> 2019>Gotabaya Rajapaksa becomes the President of Sri Lanka, URLAvailable on: mfa.gov.lk/tam/