சிற்பக்கலை மரபில் புராணச் செல்வாக்கு: ஈழத்துச் சிதம்பரத்தை அடிப்படையாகக் கொண்டது


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-3
Year of Publication : 2022
Authors : Thiruchelvam Kishandini


Citation:
MLA Style: Thiruchelvam Kishandini, "Puranic influence on the sculptural tradition: based on the Elamite Chidambaram" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I3 (2022): 13-28.
APA Style: Thiruchelvam Kishandini, Puranic influence on the sculptural tradition: based on the Elamite Chidambaram, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i3), 13-28.

சுருக்கம்:
இந்தியக் கலைமரபுகள் பண்பாட்டுப் பிரதிபலிப்புக்களாகவே அமைந்துள்ளன. இந்துக்கலைகள் அறுபத்து நான்காக வகுக்கப்பட்டாலும் அவற்றுள் நுண்கலைகள் என்று சொல்லப்படும் கட்டடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம் ஆகியன முதன்மைபெற்றுத் திகழ்கின்றன. இவ்அழகுக் கலைகளுள் ஒன்றாகச் “சிற்பம்” போற்றப்பட்டுச் சிற்பக்கலைஇ மக்களிடையே பெருவழக்கில் வந்துள்ளது. ஆலயம் என்னும் உடலுக்கு உயிராக விளங்குவது சிற்பமாகும். இவை தொன்மையையும், தத்துவச் செல்நெறியையும் பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன. அந்தவகையில் ஆலயச் சிற்பங்கள் புராணங்களைத் தழுவிய போக்கிலே அமைக்கப்பட்டுள்ளமையும் கண்கூடு. கோவிற் பண்பாட்டைப் பண்டைக் காலத்திலிருந்து வளர்த்துவரும் தமிழ் நாட்டில்இ சமய தத்துவங்களை விளக்கும் வகையில் கடவுள் புராணங்களும்இ தல புராணங்களும், அடியவர் புராணங்களும் பலவாகத் தோன்றியுள்ளன. ஆலயத்தின் வளாகத்தில் புராண நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் சிற்பங்கள் விளங்கும் அதேவேளை கருவறை விக்கிரகம் தலப்பெருமையை ஒட்டியே அமைக்கப்பட்டு, மக்கள் வழிபாட்டைப் பெற்று வருகின்றனர். எனவேஇ சிற்பக்கலைப் படைப்பிற்கு ஆன்மநல உந்துசக்தியாக புராணப் பின்னணி அமைந்துள்ளது என்பது மனங்கொள்ளத்தக்கது. இந்தியாவில்இ சிறப்பாகத் தமிழ்நாட்டில் அழகியல் சார்புடன் அமைந்து ஆன்மிக நோக்கில் வளர்ந்து வந்த சிற்பக்கலையின் செல்வாக்குஇ ஈழத்துத் திருக்கோயில்களிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளமைக்கு புராணச் செய்திகளே அடிப்படையாகும். யாழ்ப்பாணத்து ஆலயங்களில் சிற்பக்கலைப் பாரம்பரியமே காணப்படுகின்றமையானது சிறப்பாகும். அந்தவகையில் காரைநகர் சிவன் கோயில்இ கலைகளின் பிறப்பிடமாகத் திகழும் வகையில் சிற்பக்கலை அனைத்துக் கூறுகளிலும் தனித்துவமிக்கதாக விளங்குகின்றது. அந்தவகையில்இ அச்சிற்பங்கள் பல பண்பாட்டம்சங்களைப் பிரதிபலிப்பனவாக விளங்கினும் அவற்றுள் புராணச் சித்திரிப்புக்களை எடுத்துவிளக்குவதாக இவ்வாய்வு அமைகிறது. ஆலயத்திலுள்ள சிற்பங்கள் சித்திரிக்கும் புராணச் செய்திகளை அடையாளப்படுத்துதல் என்பது இவ்வாய்வின் நோக்கமாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாய்வானது விபரண ஆய்வு முறைமையியலுக்கு அமையக் கட்டமைக்கப்படுகிறது. ஆய்வின் தேவை கருதி ஆய்வுசார் விடயங்கள் உள்ளடக்கப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும்இ இவ்வாய்வில் கள ஆய்வு பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. கள ஆய்வு வடிவங்களான கலந்துரையாடல்இ நேர்காணல் மற்றும் நேரடி அவதானிப்பு ஆகியவற்றினூடாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிவமூர்த்தங்கள், தல வரலாற்றுடன் தொடர்புடைய சிற்பங்கள் மற்றும் தலபுராணம் சித்திரிக்கும் ஊர்ப்பண்பாட்டை வெளிப்படுத்தும் சிற்பங்கள் என்ற அடிப்படையில் இவ்வாய்வு வளர்ச்சி பெற்றுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
ஈழத்துச் சிதம்பரம்,புராணம், சிற்பம், வரலாறு, வடிவங்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] அதிவீரராமபாண்டியர்,கூர்மபுராணம், சென்னை, இலÑ;மீவிளாச அச்சுக்கூடம்.
[2] இளமுருகனார், சோ.,ஈழத்துச் சிதம்பர புராணம்,காரைநகர்,ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம், (2017).
[3] கடவுண் மாமுனிவர்., திருவாதவூரடிகள் புராணம்,காரைநகர்,பாலா அச்சகம்,(1982).
[4] கணபதி ஸ்தபதி,வை., சிற்பச் செந்நூல்,சென்னை,தொழில்நுட்பக் கல்வி இயக்கம்,(1978).
[5] முரளி, சோ.,“இதிஹாச புராணங்கள்”, இந்து நாகரிகம்,இலங்கை,இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், (2011).
[6] கோபாலகிரு~;ண ஐயர், ப.,இந்துப் பண்பாட்டு மரபுகள்,யாழ்ப்பாணம்,வித்தியா வெளியீடு,(1992).
[7] ………………..,இந்து விக்கிரகக் கலை மரபில் சிவ வடிவங்கள், இலங்கை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், (2010).
[8] சங்கரப்பிள்ளை, வி., சிவத்திருவடிவங்கள்,வெள்ளவத்தை, கொழும்பு சிவத்திருமன்றம்.
[9] பாலேந்திரன், ச., காரைநகர் தொன்மையும் வன்மையும், கொழும்பு, பாலாவோடை அம்மன் பதிப்பகம்,(2002).
[10] பத்மநாதன், சி.,இந்துக்கலைக்களஞ்சியம்,இலங்கை,இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், (2009).
[11] கந்தசாமி, சோ, ந.,“புராணங்களின் படிப்பினைகள்”, இந்துஒளி பொன்விழாச் சிறப்பு மலர், இலங்கை, அகில இலங்கை இந்துமா மன்றம், (2007).
[12] சுகந்தினி, சி., யாழ்ப்பாணத்து இந்துக் கோயிற் பண்பாட்டில் புராணங்களின் செல்வாக்கு,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கா.கைலாசநாதக் குருக்கள் நினைவுப் பேருரை,(2017).
[13] உமாசுதக்குருக்கள், தி., வயது – 44,ஈழத்துச் சிதம்பரத்தின் மகோற்சவ பிரதமகுரு, 27 – 02 – 2020, பி.ப. 03 – 04மணிவரை., 03 – 03 – 2020,மு.ப. 11 – 12மணிவரை.