இந்துப்பண்பாடு பற்றிய ஆய்வுப்புலங்களில் மேலைத்தேச ஆளுமைகளின் வகிபாகம் : ஒரு மீள்வாசிப்பு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-2
Year of Publication : 2022
Authors : J.Palraj


Citation:
MLA Style: J.Palraj, "The Role of Western Personalities in the Studies of Hindu Culture: A Rereading" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I2 (2022): 24-35.
APA Style: J.Palraj, The Role of Western Personalities in the Studies of Hindu Culture: A Rereading, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i2), 24-35.

சுருக்கம்:
பண்பாட்டு அசை வியக்கங்களில் இந்துப்பண்பாட்டிற்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. இந்து சமுதாயம்மரபு வழியாகப்பின் பற்றுகின்ற சமயமரபுகலை, சடங்கு, ஒழுக்கம், நம்பிக்கை, அறிவியல், பழக்கவழக்கம் முதலான அம்சங்கள் இந்துப் பண்பாட்டினுள் அடங்கும். இந்துப்பண்பாட்டம் சங்களைபல ஆய்வறிவாளர்களும் ஆய்வு செய்துள்ளனர். அவர்களை வெளிநாட்டவர், உள்நாட்டவர் என இருதளங்களில் வைத்து நோக்கலாம். குறிப்பாகமேலை நாட்டினர் இந்துப்பண்பாடு தொடர்பானகாத்திரமான ஆய்வுகளை பன்னெடுங்காலமாக மேற் கொண்டுவந்துள்ளனர். பண்டைக்காலம் முதலாக இந்தியாவிற்கும் மேலைநாடுகளுக்கும் இடையிலானபல தொடர்புகள் நிலவிவந்துள்ளன. அத்தகைய தொடர்புகளேகாலப் போக்கிலே இந்தியாவை காலனித்துவப்படுத்த காலாக அமைந்தது எனலாம். இந்த பாரியகாலனித்துவ முயற்சியினது, முதன்மை நோக்கமாக இருந்தது கிறிஸ்தவசமயத்தைப் பரப்புதலாகும். சாதியம், தீண்டாமை முதலான இந்துக்களுக்கே உரித்தான உள்ளகபடையாக் கநிலைமைகளை (Internal Stratification System) காலனித்துவ வாதிகள்நன்குபயன் படுத்திக்கொண்டு, இலவச ஆங்கிலக்கல்வி, அரசஉத்தியோகம், போன்றவற்றுடன் இதரலௌகீக சலுகைகளையும் அளித்துவகை தொகையற்ற இலட்சக்கணக்கான இந்துமக்களை மதம்மாற்றினர். இதன் பொருட்டாக பலபாதிரியார்கள் பயிற்சியளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர் இவ்வாறு வருகைதந்தவர்களுள் மக்ஸ்முல்லர் (Max Mullar)> வில்லியம் ஜோன்ஸ் (William Jones)> H.H.வில்சன்; (H.H.wilson)> ஸ்டெல்லாகிறாம்ரிச்;; (Stella Kramrisch)> சார்ள்ஸ்வில்கின்ஸ் (Charles Wilkins)> A.A.மக்டோனால் (A.A.macdonell)> போன்ற மேலைத்தேசத்து ஆளுமைகள் இந்தியசுதேசியப் பண்பாட்டினால் ஈர்க்கப்படுகிறார்கள். இதனால், இந்திய தேவநாகரி மொழியான சமஸ்கிருத மொழியினைப் பயின்று இந்து சமயத்திலுள்ள வியப்பூட்டும் பல அம்சங்களை அறியலானார்கள். இந்துப் பண்பாட்டை அறிந்து கொண்டதன் விளைவாக, இவர்களினால் பல ஆய்வுப்படைப்புக்கள் வெளிவந்தன. குறிப்பாக, மக்ஸ்முல்லர் இருக்குவேதத்தினை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து இந்துப்பண்பாட்டினை உலகறியச்செய்த பெருமைக்குரியவர். ஆகவே இந்துக்களின் பழமையான, செழுமையான இந்துப்பண்பாட்டம் சங்களைசர்வதேச பரிமாணங்கொள்ளச் செய்ததில் மேலைத்தேச ஆளுமைகளின் வகிபாகம் இன்றியமையாதது ஆகும். இதனால், அவர்களது ஆய்வுப்படைப்புக்களை ஆராய்வதே இவ்வாய்வக் கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்விற்கு வரலாற்றியல் ஆய்வு அணுகுமுறையும் (Historical methodology), விபரண ஆய்வு அணுகுமுறையும் (Discriptive methodology) உபயோகிக்கப்பட்டுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
இந்துப்பண்பாடு, இந்து இலக்கியம், வகிபாகம், மேலைத்தேச ஆளுமைகள்.

துணைநூற்பட்டியல்:
[1] சுபராஜ்.ந., (2012), 'இந்துமதமும்மேற்கத்தையவர்களின்ஆய்வுகளும்', அறிவகம்,கிளிவெட்டி,திருமலை
[2] வாமன்.நா., (2011), 'மக்ஸ்முல்லர்', இந்துக்கலைக்களஞ்சியம், தொகுதி 11, இந்துசமயகலாசாரஅலுவல்கள்திணைக்களம்,கொழும்பு.
[3] முகுந்தன்.ச., (2021), 'இந்துக்கற்கைகளைவளமூட்டியமேலைத்தேசத்துஆளுமைகளும்ஆய்வுகளும்', குமரன்புத்தகஇல்லம், கொழும்பு.
[4] Girardot.N.J.,(2002), “Maxmullers” “Sacred Books” and the Ninenteenth –Century Production of the Comparative Science of Religion”, The University of Chicago Press.
[5] Stoller miller,Barbara.,(1983), “Exploring India’s Sacred Art Selected Writings of Stella Kramrish”, University of Pennsylvania press.