இலங்கையில் நிலைமாறுகால நீதி: நடைமுறைசார்ந்த பிரச்சினைகளும், தீர்வுகளும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal Volume-4 Issue-2 Year of Publication : 2022 Authors : A. Kanneraj |

|
Citation:
MLA Style: A. Kanneraj, "Transitional justice in Sri Lanka: Practical Issues and Solutions" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I2 (2022): 17-23.
APA Style: A. Kanneraj, Transitional justice in Sri Lanka: Practical Issues and Solutions, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i2), 17-23.
|
சுருக்கம்:
2009இல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆயுத முனையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்த யுத்தம் முடிவுறுத்தப்பட்ட காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள், மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களினாலும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களாலும், சர்வதேச நிறுவனங்களாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதேவேளை,குறித்தவிடயம் 2012ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விவாதப்பொருளாகவும் இருந்துவருகின்றது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய,இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான பரிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை என்னும் விடயம் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆயினும், பரிந்துரைக்கப்பட்ட குறித்த இப்பொறிமுறையினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை நீதியினைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
இலங்கையில் மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விடயத்தைக் கையாள்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலைமாறுகால நீதிப்பொறிமுறை பொருத்தமுடையதா? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் நோக்கமாக,நிலைமாறுகால நீதிப் பொறிமுறையினை முன்னெடுப்பதில் நடைமுறையில் எதிர்நோக்கப்படும் சவால்களை அறிந்து கொள்வதுடன், இப்பொறிமுறையின் பொருத்தப்பாடு தொடர்பில் அறிந்து கொள்வதும் இவ்வாய்வின் துணை நோக்கமாகும்.
இதனடிப்படையில் ஆய்விற்குத் தேவையான இரண்டாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டு, அவை பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. அவையாவன்நடைமுறையில் உண்மையைக் கண்டறிவதில் உள்ள சவால்கள், பாதிக்கப்பட்ட மக்களினால் குறித்த பொறிமுறை முன்னெடுக்கப்படாமை, அரசியல் வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் செயற்படுகின்றமை,சாட்சிகள் பாதுகாக்கபபடுகின்றமையில் உள்ள சவால்கள்ஆகியனஆய்வின் முடிவாகக்கண்டறியபபட்டுள்ளன. அத்துடன்,குறித்த பொறிமுறையில் உள்ள பலவீனங்கள் எவையென்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றிற்கான பரிந்துரையாக பின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் பொருத்தப்பாடான செயற்றிறன் மிக்க பொறிமுறையாக உள்ளதையும் இவ்வாய்வு முன்மொழிந்துள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: நிலைமாறுகால நீதிப்பொறிமுறை, பின்நிலைமாறுகால நீதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை,மனித உரிமை மீறல்கள், உள்நாட்டு யுத்தம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] Amnesty International, 2021, Sri Lanka: Landmark UN resolution marks crucial turningpoint on Justice & accountability. URL Available on:https://www.amnesty.org/ en/latest/news /2021/03/sri-lanka- landmark-un-resolution -marks-crucial-turning -point-on-justice- and-accountability/
[2] Carth Collins, 2010, Post- Transitional – Justice, The Pennsylvania State University Press, University Park, Pennsylvania.
[3] Crocker D, 2019, Rocking with Past wrong: A normative Framework, URL Available on:Reckoning_with_Past_Wrongs_A_Normative_Framework.pdf.
[4] Foreign Ministry, Sri Lanka, 2017, Hansard, URL Available on: https://hansard. parliament.uk /Lords/2017-10-12 /debates/14CAA83D- 8895-4182-8C4F- D964E0A5B399/SriLanka.
[5] Geoff D, 2010, Impact Assessment, not Evaluation; defining a limited role for positivism in the study of Transitional Justice:International Journal of Transitional Justice4(3), URL Available on:https://www.geoffdancy.com /impact-assessment- not-evaluation-defining-a- limited-role-for- positivism-in- the-study-of- transitional-justice/.
[6] Paikiasothy S, 2017, Challenges to Transtional Justice in Sri Lanka, URL Available on:http://harvardhrj.com /wp-content/uploads /sites/14/2017 /10/Saravanamuttu.pdf
[7] Skaar E, 2011, Explaining Post- Transitional Justice, Judicial Independence and Human Rights in Latin America, URL Available on: https://link.springer.com /chapter/10.1057 /9780230117693_2.
[8] Susanne B, 2014>Transitional Justice Theories(Edi), a glassHouse book, URL Available on:https://www.routledge.com /Transitional-Justice- Theories/Buckley- Zistel-Beck-Braun- Mieth/p/book/ 9781138924451.
[9] Wahyuningroem S, 2019, Towards Post – Transitional Justice: The failures of Transitional Justice and The role of civil Society in Indonesia, Journal of Southeast Asian Human Rights, Vol.3, URL Available on:11497-529-25958-1-10-20190716%20(1).pdf.
[10] Navinan.R> 2017>Chlanges in Transitional Justic>URL Available on:https://yarl.com/forum3/topic/192232 .
[11] Alilan.R>2016>Reconciliation and Transitional Justice of the Government of Sri LankaURL Available on:https://maatram.org/?p=4325
|