| தேசியமயமாக்கலும் மலையகத் தமிழர்களும் - குருதிமலை நாவலை அடிப்படையாகக் கொண்டதோர் மதிப்பீடு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal Volume-4 Issue-1 Year of Publication : 2022 Authors : N.Sudarshini |

|
Citation:
MLA Style: N.Sudarshini, Nationalization and Upcountry Tamils - An Assessment Based on the Kuruthimalai Novel" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I1 (2022): 61-70.
APA Style: N.Sudarshini, Nationalization and Upcountry Tamils - An Assessment Based on the Kuruthimalai Novel, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i1), 61-70.
|
சுருக்கம்:
ஐரோப்பியரின் வருகையினால் தமிழுக்குக் கிடைத்த இலக்கிய வடிவங்களில் ஒன்றான நாவல், தனிமனித வாழ்வியலை படம்பிடித்துக் காட்டுவதைக் காட்டிலும் ஒரு சமூகம் தொடர்பான கருத்தியலை உலகுக்கு படம் பிடித்துக் காட்டும் ஒருவகை புனைகதை இலக்கியமாகும். அது, கற்பனையாகவும், யதார்த்தத்தின் பிரதிபலிப்பாகவும் உரைநடையில் எழுதப்படும் நெடுங்கதை இலக்கிய வடிவம் எனலாம். சுருக்கமாகக் கூறுவதாயின் நாவல் என்பது கதை கூறும் முயற்சியல்ல. அது குறிப்பிட்ட பிரச்சினையின் தர்க்கரீதியான வளர்ச்சியினை வரலாற்று முறையில் எடுத்துரைப்பதாகும். அது வெறுமனே நிகழ்ச்சி விவரணமாக அமையாது மனித உணர்வுகளதும், உறவுகளதும் இயங்குநிலையை வாசகனைக் கவரும் வகையில் தரும் போது ‘புதினமாய்’ பரிணமிக்கின்றது. இவ்வாறான காரணங்களால் நாவல்கள் சமுதாயத்தின் சரித்திரங்கள் எனப்படுகின்றன. மேற்கூறிய விடயங்களை அடியொற்றி ஈழத்தில் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வகையில், மலையக மக்களின் வாழ்க்கைக் கோலங்களையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையில் படைக்கப்பட்ட நாவல்கள் பலவுள்ளன. இவற்றுள் தி. ஞானசேகரனால் படைக்கப்பெற்ற ‘குருதிமலை’ நாவலும் ஒன்றாகும். 1970 களில் இலங்கையில் காணப்பட்ட பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. இந்நிகழ்வு மலையக மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவித்ததோடு, சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழ்நிலையையும் தோற்றுவித்தது. இக்காலப் பின்னணியை அடியொற்றி உருவாக்கப்பட்ட நாவலாக ‘குருதிமலை’ காணப்படுகிறது. இந்நாவல் மலையக மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாய் போற்றத்தக்கது என்று பலராலும் விதந்து கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வடிப்படையில், இந்நாவலினூடாக வெளிப்படுத்தப்படும் சிங்கள - மலையகத் தமிழ் மக்களிடையே காணப்பட்ட உறவுநிலை, தேயிலைத் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள் என்பவற்றை அறியும் நோக்குடனேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: மலையகம், தேசியமயமாக்கம், பெருந்தோட்டங்கள், குருதிமலை.
|
துணைநூற்பட்டியல்:
[1] சாரல்நாடன், (2000), மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும், கொட்டகலை, சாரல் வெளியீட்டகம்.
[2] சிவகுமாரன், கே. எஸ்., (1999) ஈழத்து நாவல்களிற் சில திறனாய்வு குறிப்புகள், கொழும்பு, மீரா பதிப்பகம்.
[3] சுப்பிரமணியம்.நா., (1988) 1978 – க்குப் பின் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம், மல்லிகை இதழ், இதழ்-213.
[4] ஞானசேகரன், த., (1979) குருதிமலை, கொழும்பு, வீரகேசரி வெளியீடு.
[5] முரளிதரன், சு., (2001) மலையக இலக்கியத் தளங்கள், கொட்டகல, சாரல் வெளியீட்டகம்
|