அர்த்தசாஸ்திரத்தில் வெளிப்படுத்தப்படும் நீதிச் சிந்தனைகள் - ஒரு மெய்யியல் நோக்கு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-1
Year of Publication : 2022
Authors : Marimuthu Prahasan


Citation:
MLA Style: Marimuthu Prahasan, Arttacastirattil velippatuttappatum nitic cintanaikal - oru meyyiyal nokku" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I1 (2022): 47-60.
APA Style: Marimuthu Prahasan, Arttacastirattil velippatuttappatum nitic cintanaikal - oru meyyiyal nokku, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i1), 47-60.

சுருக்கம்:
சந்திரகுப்த மௌரியனால் கட்டமைக்கப்பட்ட மௌரியப் பேரரசின் முதலமைச்சராக செயற்பட்ட கௌடில்யரினால் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் புராதன இந்திய சமூகத்தினை வழிநடாத்துவதற்கான சட்ட ஒழுங்கு மற்றும் நீதி பற்றிய சிந்தனைகளை முன்வைத்துள்ள நூல்களில்; முதன்மையான ஒனறாகும். கி.பி நான்காம் நூற்றாண்டுக் காலப்பகுதிக்குரிய இது சிறிய இனக்குழு வாழ்க்கையில் இருந்து பாரிய சாம்ராஜ்ஜியமாக மக்களது சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கை விரிவடைந்து வந்த நிலையில் ஆட்சியாளன் எவ்வாறு தன்னுடைய தேசத்தில் ஒழுங்கினை அந்நிய படையெடுப்புக்களையும், உள்நாட்டுச் சதிகளையும் எதிர்கொண்டு பேண வேண்டும் என்பதற்கான வழிகாட்டலாக அமைந்துள்ளது. நூற்றி ஐம்பது அத்தியாயங்களில்; நாட்டின் பொருளாதார கொள்கைகள், நீதி நிர்வாகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்வாக கொள்கைகள் என்று மூன்று பிரதானமான விடயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கொள்கையாக அல்லாமல் அரசனது தலைமையில் மக்களது நலனை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் அரசாட்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆட்சியாளனை நெறிப்படுத்துகின்ற வழிகாட்டியாகவே அமைந்துள்ளமை இதன் சிறப்பம்சமாகும். அரசியல் யதார்த்தவாதத்தின் (Pழடவைiஉயட சுநயடளைஅ) அடிப்படையில் ஏகாதிபத்திய அரசினை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு வெளிப்படுத்தப்பட்ட முதலாவது சிந்தனையாக அமையும் இந் நூலின் மூன்றாம், நான்காம் அத்தியாயங்களில் தேசத்தின் சட்ட ஒழுங்கு, நீதி நிர்வாகம் தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பண்பு சார்ந்ததாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வில் குறித்த விடயங்கள் நுணுகி மெய்யியல் ரீதியான பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
கௌடில்யர், அர்த்தசாஸ்திரம், நீதி.

துணைநூற்பட்டியல்:
[1] ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா. (2016). அர்த்த சாஸ்திரம் என்னும் சாணக்கியரின் நீதிநூல் (9ம் பதிப்பு). இந்தியா: ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ்
[2] முகுந்தன். ச. (2014). இந்து இலக்கியங்களில் பொருளியல் அரசியல் நீதிபரிபாலனம். இலங்கை: பூபாலசிங்கம் பதிப்பகம்
[3] Shamasastry. R. (1905). Koutilya’s Arthashastra. Online version - http://www.zoroastrian.org.uk/scripture/indian/arthashastra/index.html
[4] Rangarajan, L.N. (1992). Koutilya – The Arthashastra. USA: Penguin Books
[5] Trautmann, T.R. (2016). Arthashastra – The Science of Wealth. USA: Penguin Books
[6] Gautam, P.K. Understanding Dharma and Atha in Statecraft through Kautilya’s Arthashastra. India: Institute for Defence Studies and Analysis