சங்ககால ஒளவையை கூத்தரங்கில் வெளிப்படுத்தியமை: ஈழத்துக் கூத்துமீளுருவாக்கத்தைமையப் படுத்திய ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-4
Year of Publication : 2021
Authors : T.Gowrieeswaran


Citation:
MLA Style: T.Gowrieeswaran "Contribution of Tourism on Quality of Life– Study based on Pasikuda, Batticaloa" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I4 (2021): 103-110.
APA Style: T.Gowrieeswaran, Contribution of Tourism on Quality of Life– Study based on Pasikuda, Batticaloa, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i4), 103-110.

சுருக்கம்:
தமிழ்ப்பண்பாட்டில் ஒளவைஎனும் பெயர் மிகுந்தசெல்வாக்குப் பெற்றதாக இருந்துவருகின்றது. மிகப் பெரும்பாலும் சிறுவயதிலிருந்தே ஒளவையைப் பற்றி அறிந்து கொள்ளும் நிலைமை ஒவ்வொருவருக்கும் வாய்க்கப்பெறுகின்றது. ஒழுங்கமைக்கப் பட்டுள்ள கல்வித்திட்டங்களுடாகவும் உள்ளுர் வாய்மொழிக் கதைகளுடாகவும் ஒளவை ஒவ்வொருவருடையமனதிலும் ஆழமாக அறிமுகமாக்கப்பட்டுவருகின்றார். தமிழர் பண்பாட்டு மரபில் பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு ஒளவைகள் வாழ்ந்துள்ளபோதிலும் ஆத்திசூடிபாடிய கூன்விழுந்தவயதுமுதிர்ந்த ஒளவையே ஒளவையாராக பொதுப்புத்தியில் ஆழமாகவேர் கொள்ளச் செய்யப்பட்டிருக்கின்றார். கட்புலமூடாகவும், கருத்துப்புலமூடாகவும் வயது முதிர்ந்த ஒளவைப்பாட்டியே வெளிப்படுத்தப்படுகின்றார். இவ்வாறுபொதுப்புத்தியில் ஒளவையின் படிமம் இருக்கின்ற அதேவேளை ஒளவைகள் பலர் என்பதும் அதில் சங்ககாலத்து ஒளவை மிகவும் முற்போக்கானபெண் ஆளுமைஎன்பதும் பல்வேறுஆராய்ச்சியாளர்களாலும் எடுத்துக் காட்டப்பட்டு அதியமானுடன் நட்புக்கொண்டிருந்த சங்ககாலத்து ஒளவையின் முக்கியத்துவம் பற்றியும் அந்தஒளவையினைப் பொதுப்புத்தியில் பதிவாக்கஞ் செய்யவேண்டும் என்பதுபற்றியும் வலியுறுத்தப் பட்டுவருகின்றது. இத்தகைய ஆராய்ச்சியும், முடிவுகளும், பரப்புரைகளும் இவைசார்ந்த ஆய்வறிவாளர்களுடனும், குறைந்தளவிலான வெகுமக்களுடனும் மட்டுப்பட்டதாக இருந்துவருவதனையும் அவதானிக்கமுடிகின்றது. எனவேசங்க காலத்து ஒளவையின் ஆளுமைகள் குறித்துசமூகத்தின் பல்வேறுமட்டங்களிலும் வெளிப்படுத்தல்களை மேற்கொள்வதும் அது பற்றி உரையாடச் செய்வதும் முக்கியமானது என்ற நோக்கத்துடன் சங்க காலத்தில் வாழ்ந்த ஒளவையினை கூத்தரங்கில் பாடுபொருளாக்கிபரவலாக்கம் செய்யும் முயற்சி ஈழத்துக் கூத்துமீளுருவாக்கத்திற்கான ஆய்வுச் செயற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அழகியற் கற்கைகளுக்கானஉயர்கல்விநிறுவகத்தின் நாடகத்துறையினைச் சார்ந்து இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி இவ்வாய்வுக் கட்டுரையில் கூறப்படுகின்றது. விவரணஆய்வு, பங்குகொள் ஆய்வு முறைமைகளுடாக முன்வைக்கப்படும் இக்கட்டுரைக் கானதரவுகளாக சங்ககாலத்து ஒளவைபற்றிய ஆய்வறிவாளர் கருத்துக்களும், ஆளுமையானஒளவையாள் எனும் கூத்துப்பனுவலும், ஆய்வாளரின் பங்குகொள் அனுபவங்களும் கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
ஆணாதிக்கம், பெண்ணிலைவாதம், ஊடகங்கள், வரலாற்றைக்கட்டமைத்தல்.

துணைநூற்பட்டியல்:
[1] சித்திரலேகாமௌனகுரு, (2007),பெண் அனுபவம் இலக்கியம்,விபுலம் பதிப்பகம்,ஞானசூரியம் சதுக்கம்,மட்டக்களப்பு,
[2] இன்குலாப் நாடகங்கள், 2000
[3] சி.ஜெயசங்கர், (2011),கூத்துமீளுருவாக்கம்,ஈழக்கூத்தின் புதியபரிமாணம்,கருத்துஸ்ரீபட்டறை,மதுரை.
[4] நதிராமரியசந்தனம்.,(2015) சங்ககாலஒளவையார் பாடல் ஒருபன்முகநோக்கு,நிவேதினி, இதழ் 16, பக் 59 - 79
[5] http://paadini.blogspot.com/2014_05_25_archive.html