ஈழத்து இந்து இலக்கிய மரபில்கண்ணகி வழக்குரை: பாத்திர வார்ப்புகள் பற்றிய சில அவதானங்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-3 Year of Publication : 2021 Authors : Dr. V. Gunabalasingam |

|
Citation:
MLA Style: Dr. V. Gunabalasingam "Kannaki Valakkurai in Hindu Literary Tradition of Ealam: Some Observation on the Creation of Characters" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 50-57.
APA Style: Dr. V. Gunabalasingam, Kannaki Valakkurai in Hindu Literary Tradition of Ealam: Some Observation on the Creation of Characters, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 50-57.
|
சுருக்கம்:
தமிழில் பக்தி நெறி சார்ந்த இலக்கியங்கள் தோற்றம் பெற்ற நாடுகளிலே தமிழகத்திற்கு அடுத்தாற் போல் ஈழத்தைக் கொள்ள முடியும்.ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவுகள் புராதனமானவை ஆகும். அரசியல், வணிகம், படையெடுப்பு, பண்பாடு முதலான உறவுகள் அவற்றிலே குறிப்பிடற்குரியவை. இந்த பன்முகப்பட்ட உறவுகளின் பிரதிபலிப்பினை ஈழத்திலே தோற்றம் பெற்ற இலக்கியங்களிலும் அவதானிக்க முடியும். அந்தவகையில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் செல்வாக்கினால் ஈழத்தில் தோற்றம் பெற்ற பக்தி நெறிசார்பார்ன தமிழ் இலக்கியமே கண்ணகி வழக்குரை ஆகும். ஈழத்தில் வழக்கிலுள்ள வழிபாட்டு மரபுகளிலே கண்ணகி வழிபாடு பிரசித்தமான வழிபாடு ஆகும். இங்கு வழக்கிலுள்ள நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகளில் பாடப்படுகின்ற பனுவல்களில் காவியம் என்றோரு வகையுமுண்டு. இவ்வகையில்கண்ணகி வழிபாட்டு இலக்கியமாகவே கண்ணகி வழக்குரை அடையாளப்படுத்தப்படுகின்றது. கண்ணகி வழக்குரை காவியத்தில் காணத்தக்க பாத்திரங்களின் உருவாக்கமும் அவைகளின் குணவியல்புகளும் சிலப்பதிகாரக் காவியப் பாத்திரத்திரங்களின் உருவாக்கத்திலும் குணவியல்புகளிலும் இருந்து வேறுபடுகின்றன. இவ்விரு காவியங்களையும் ஒப்பியல் நோக்கில் அவதானிக்கின்ற வேளையில் இரண்டு காவியங்களிலும் காணப்படுகின்ற பாத்திரங்களின் தனித்துவத்துவங்களையும் பொதுமைகளையும் இனங்காண முடிகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: ஈழும், இந்து சமயம், கண்ணகி வழக்குரை, தமிழ் நாடு, பாத்திரங்கள்,கண்ணகி வழிபாடு, மட்டக்களப்பு, கிழக்கிலங்கை.
|
துணைநூற்பட்டியல்:
[1] சிலப்பதிகாரம்- மூலமும் புலிêர்க்கேசிகன் தெளிவுரை- பாரி நிலையம்,சென்னை-1958
[2] ஆறுமுகம்,க.,(பதிப்பு) (2010) கண்ணகையம்மன் பத்ததியும் பாடல்களும் விபுலம் வெளியீடு.
[3] இரகுபரன்,க., (பதிப்பு) (2003) சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
[4] கந்தையா,வீ.சி.,(பதிப்பாசிரியர்)(1968) கண்ணகி வழக்குரை,இந்து சமய விருத்திச்சங்கம்-காரைதீவு
[5] நடராசா, கு.ஓ.ஊ( பதிப்பு). (1970)ஈழத்து தமிழ் நூல் வரலாறு-. அரசு வெளியீடு, கொழும்பு
[6] மௌனகுரு,சி.,(பதிப்பு)(2003)மட்டக்களப்புத் தமிழகத்தில் இந்துப்பண்பாடு(- இரண்டாவது உலக இந்து மகாநாட்டு மலர்-மட்டக்களப்பு பிரதேசக்கிளை
|