பத்துப்பாட்டில் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-3 Year of Publication : 2021 Authors : Ruby Valentina Francis
|

|
Citation:
MLA Style: Ruby Valentina Francis "Cultural Values of Tamils in Paththuppāttu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 8-17.
APA Style: Ruby Valentina Francis, Cultural Values of Tamils in Paththuppāttu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 8-17.
|
சுருக்கம்:
தனிமனிதர்கள் ஒருங்குகூடிச் சில நெறிகளின் அடிப்படையில் வாழ்வது சமூகம். தனிமனிதனுடைய சிந்தனையும், பழக்கவழங்கங்களும், பண்பாடுசார் பின்பற்றுகைகளும் சமூகத்தாலேயே அவனுக்கு அவனுக்கு அளிக்கப்படுகின்றன. இன்னின்னவை சமூக நலத்திற்கு உகந்தன என்றும் இன்னின்னவை தீங்காவன என்றும் சமூகம் தன் பட்டறிவால் உணர்ந்துகொள்ளத்தக்கன தள்ளத்தக்கனவற்றைப் பாகுபாடு செய்கின்றது. இவை பற்றிய சிந்தனைகளின் தொகுப்பே அறமாகவும் ஒழுக்கமாகவும் விழுமியங்களாகவும் மரபாகவும் பழக்கவழக்கங்களாகவும் மனிதர்களிடையே தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தனிமனிதன் சமூகத்தின் விதிகளுக்குட்பட்டு அதன் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் பாடுபடவேண்டும் எனச் சான்றோர் எதிர்பார்க்கின்றனர். பல நிலைகளிலும் பண்பட்டிருந்த சங்ககாலச் சமுதாயம் தனிமனிதர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய பல உயர்நெறிகளையும் அவை தொடர்பான நம்பிக்கைகளையும் பழக்கவழங்கங்களையும் உருவாக்கிப் போற்றியுள்ளது. சில அறக்கோட்டுபாடுகளையும் விழுமியங்களையும் சமூக நடைமுறைகளையும் எடுத்துக்காட்டி, அவை தனிமனிதனைச் சமூகத்தோடு எவ்வாறு தொடர்புபடுத்தியுள்ளன என்பதைச் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூற்றொகுதிகள் கூறும் கருத்துக்களின் வாயிலாக அறியலாம். தனிமனிதர்களின் பண்பினைப் பொறுத்தே சமூகத்தின் பண்பும் அமைய முடியும் என்ற பேருண்மையைத் தனிமனிதர்களுக்கு வகுத்துக்கூறிய கருத்துக்களின் ஊடாகப் புலப்படுத்துகின்றது. இவ் ஆய்வுக்கட்டுரை மூலம் சங்க இலக்கியங்களில் குறிப்பாகப் பத்துப்பாட்டு என்ற தொகுதியில் உள்ள நூல்களின் வாயிலாக எடுத்துக்கூறப்படும் தமிழர் சமூகத்தின் பண்பாடுசார் விழுமியங்களைப் பற்றி எடுத்துரைக்கப்படுகின்றன. பத்துப்பாட்டிலுள்ள ஆற்றுப்படை நூல்கள், அகத்திணை - புறத்திணைசார் நூல்கள் என்பவற்றில் கூறப்படும் பண்பாடுசார் விழுமியங்கள் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
|
முக்கிய வார்த்தைகள்: பத்துப்பாட்டு, தமிழர் பண்பாடு, விழுமியங்கள், விருந்தோம்பல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] சங்க இலக்கியம்: பத்துப்பாட்டு : மூலமும் தெளிவுரையும், 2010, தெளிவுரை - ச.வே. சுப்பிரமணியன், சென்னை, மணிவாசகர் பதிப்பகம்.
[2] கடிகாசலம்,ந., சிவகாமி. ச., (ப.ஆ)., (1998), சங்க இலக்கியம்- கவிதையியல் நோக்கு, சிந்தனைப்புல மதிப்பீடு, சென்னை: உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்.
[3] சிதம்பரனார், சாமி., 1962, எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும், சென்னை: இலக்கிய நிலையம்.
[4] தட்சிணாமூர்த்தி, அ., 2001, சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்,தஞ்சாவூர், மங்கையர்க்கரசி பதிப்பகம்.
|