மதமும் இலக்கியமும் : யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-1 Year of Publication : 2021 Authors : K.Arundaharan
|

|
Citation:
MLA Style: K.Arundaharan "Religion and Literature: The Reign of the Tamil King of Jaffna" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I1 (2021): 49-57.
APA Style: K.Arundaharan, Religion and Literature: The Reign of the Tamil King of Jaffna, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i1),49-57.
|
சுருக்கம்:
தமிழிலக்கிய வரலாறுகளும் அவை தொடர்பான ஆய்வுகளும் முழுச்சாத்தியப்பாடுகளோடு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் போதுதான் தமிழிலக்கிய வரலாறு என்பது முழுமையின் மைல்கல்லைத் தொடும் என்பது வரலாற்றாய்வாளர்களின் கருத்துக் கணிப்பாகும். கடவுளர்கள், மன்னர்கள், நிலப்பிரபுக்கள், கொடை வள்ளல்கள் என்று தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு மொழிசார்ந்த இலக்கிய வரலாற்றை அனைத்துக் காலங்களுக்கும் ஒருமித்த போக்குடைய ஒற்றைப்படைத் தன்மையான வாசிப்பில் எழுதியிருப்பது என்பது இன்றைய இளம் ஆய்வாளர்களின் மறுவாசிப்பிற்கு வழிகோலுவதாக உள்ளது. அந்தவகையில் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறும் விதிவிலக்காக விலகிச் செல்லாமல் இத்தகைய மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தச் சூழலுக்குத் தள்ளப்படுகின்றது. இலக்கிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மேலாதிக்கம் பெற்றுச் செல்வாக்குச் செலுத்தும் ஆதிக்கக் காரணிகளின் பின்புலத்தை புலமை நோக்கோடும் ஆய்வுப் புலத்தோடும் உற்று நோக்கிப் பார்க்கும்போது, எழுதப்படாத பல புதிய புதிரான கருத்துச் சிந்தனை மர்மங்கள் வெளிக்கிளம்பும் என்பது எதிர்பார்ப்பிற்குரியது.இந்தவகையில் குறிப்பாக ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தின் பின்புலத்தை, அக்காலத்தில் நிலவிய ஆதிக்கச் சக்திகளின் பின்னால் புதையுண்டு கிடக்கும் கருத்துப் புதையல்களைக் கட்டவிழ்ப்பதனை நோக்காகக் கொண்டு இவ் ஆய்வுக் கட்டுரை எழுதப்படுகின்றது. மதம் - இலக்கியம் என்பவற்றிற்கிடையேயான இடைவினைத் தொடர்பையும், ஊடாட்டத்தையும் உற்று நோக்குவதன் மூலம் கிடைக்கப்பெறும் சில மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து,ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு பற்றிய மறுவாசிப்பிற்கான தொடர்ச்சியை உருவாக்குவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: இலக்கியம், மதம்,ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு, ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்,புராணம், பள்ளு, காப்பியம், வாய்மொழிக் காப்பியம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] பத்மநாதன், சி., 2004,ஈழத்து இலக்கியமும் வரலாறும், கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம்.
[2] சிற்றம்பலம்,சி. க.,1992, யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு.
[3] சிவத்தம்பி, கா., 1987,ஈழத்தில் தமிழிலக்கியம், சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
[4] சிவத்தம்பி, கா., 2001, தமிழிலக்கியத்தில் மதமும் மானிடமும், சென்னை: மக்கள் வெளியீடு.
[5] தொம்சன் ஜோர்ஜ், 1981, கேசவன், கோ., (மொ.பெ), மனித சமூகாசாரம்.
[6] தோத்தாத்திரி, எஸ்., 200, மாக்சிசமும் மதமும்,
|