திருக்குறளில் நேரமுகாமைத்துவம்: உண்மை நேரமும் உணர்வு நேரமும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-1 Year of Publication : 2021 Authors : Vijitha Thivakaran
|

|
Citation:
MLA Style: Vijitha Thivakaran "Time Management in Thirukkural: Real Time and Emotional Time" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I1 (2021): 31-37.
APA Style: Vijitha Thivakaran, Time Management in Thirukkural: Real Time and Emotional Time, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i1),31-37.
|
சுருக்கம்:
சமகால நவீன முகாமைத்துவச் சிந்தனைகள் பண்டைத் தமிழிலக்கியங்களிலும் பரவலாக எடுத்துக் கூறப்பட்டுள்ளமையைச் சங்க இலக்கியங்கள், சங்கம் மருவியகால இலக்கியங்கள் உள்ளிட்ட பண்டைத் தமிழிலக்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. சமகால நவீன முகாமைத்துவச் சிந்தனைகளில் முதன்மை வாய்ந்ததாக விளங்கும் நேர முகாமைத்துவம் பற்றி அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் எடுத்துரைக்கும் உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளில் காண முடிகின்றது. மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் நேரம் என்பது மிகவும் இன்றியமையாததும் முகாமை செய்யப்பட வேண்டியதும் ஆகும். இந்த ஆய்வுக் கட்டுரையில் திருக்குறளில் கூறப்படும் நேரமுகாமைத்துவச் சிந்தனைகளை எடுத்துக் கூறி, வள்ளுவர் நேரத்தை உண்மை நேரம் எனவும் உணர்வு நேரம் எனவும் பிரித்துக் கூறியமை பற்றி எடுத்து ஆராயப்படுகின்றது. திருக்குறளில் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் நேரம் பற்றிய சிந்தனைகள் கூறப்பட்டுள்ளன. நேரம் மனித வாழ்க்கையில் இரு வேறு விதமாகத் தொழிற்படுவதனைத் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த ஆய்விற்காகத் திருக்குறள் முதன்மை ஆதாரமாகவும் திருக்குறள் தொடர்பாகவும், நேர முகாமைத்துவம் தொடர்பாகவும் வெளிவந்துள்ள எழுத்தாவணங்கள் துணை ஆதாரங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தவகையில் மனித வாழ்க்கையில் நிர்வாகம், கடமை, உணர்வுகள் ஆகியவற்றில் நேரம் அதிகளவில் செல்வாக்குச் செலுத்துகின்றது. தொழில் வாழ்க்கையில் நேரமுகாமை இன்மையினால் முரண்பாடுகளும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடலும், பிரிவும், மனக்கசப்புகளும் ஏற்படுவதைத் திருக்குறள் மிக அழகாக எடுத்துக் காட்டுகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: சமகால முகாமைத்துவம், நேர முகாமைத்துவம், திருக்குறள், தொழில்வாழ்க்கை.
|
துணைநூற்பட்டியல்:
[1] இரவீந்திரன், மு., 2005, திருக்குறள் காட்டும் நிர்வாக இயல் - வணிக இயல், சென்னை: வானதி பதிப்பகம்.
[2] கனகசிங்கம், வ., 2006, சமகால முகாமைத்துவம், கொழும்பு - சென்னை: குமரன் அச்சகம்.
[3] வேல்நம்பி, தி., 2009, திருக்குறளும் முகாமைத்துவமும் - ஓர் ஒப்பீட்டாய்வு, கொழும்பு: சேமமடு பதிப்பகம்.
[4] திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், 1976, சென்னை: தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
[5] Chandan, S. J.,1997,Management: Theory and Practice, New Delhi: Vikas Publishing House Pvt Ltd.
|