நற்றிணை பாடல்களில் வரும் ஊரின் சிறப்புகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-4 Year of Publication : 2020 Authors : Dr.K.Dhanalashmi
|

|
Citation:
MLA Style: Dr.K.Dhanalashmi "Narrinai Patalkalil Varum Urin Cirappukal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 76-80.
APA Style: Dr.K.Dhanalashmi, Narrinai Patalkalil Varum Urin Cirappukal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),76-80.
|
சுருக்கம்:
பண்டைய காலத் தமிழகம் வடக்கே வேங்கடமும், தெற்கே குமரியும், கிழக்கும், மேற்கும் கடல்களும் எல்லைகளாக அமைகின்ற விரிந்த பரந்த நிலப்பரப்பாக இருந்தது. இதனை,
“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுகத்து”
என்னும் பாடல் தெளிவுபடுத்துகிறது.
சங்க இலக்கியப் பாடல்களில் மக்கள் வாழ்ந்த ஊர்களையும், அந்த ஊர்கள் அடங்கிய நாடுகளையும் குறிப்பிடப்படுகின்றன. ஊர் என்ற சொல்லால் வயலும் வயலும்சார்ந்த பகுதியை குறிக்கும். நாடு ஊர் என்பன நிலத்தின் உட்பிரிவுகளாகும், நிலம், திணை என்பன பொதுவான பிரிவின. திணையின் உட்பிரிவு ஊர். சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் நற்றிணை முதலிடம் பெறுகிறது. நல்ல ஒழுகலாறுகளைக் கூறுவது என்பது இதன் பொருள் ஆகம். திணை என்ற சொல்லுக்குக் கொண்ட கொள்கையில் திண்மையாக நிற்பது என்று பொருள். 9 அடி முதல் 12 வரை உள்ள பாடல்கள் உள்ளன. நற்றிணைப் பாடல்களைத் தொகுக்க செய்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. இதில் 58 பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அகநானூற்றிலும், நற்றிணையிலும் ஊர்ப்பெயர்கள் மிகுதியும் உவமைகளாகப் பயின்று வந்துள்ளன. தொண்டி, மாந்தை, கிடங்கில், சாய்க்காடு, ஆர்க்காடு, கூடல், பொறையாறு, கழுமலம், உறந்தை, மருங்கூர்ப்பட்டினம், இருப்பை, பாரம், குன்னூர், கழாஅர், முள்;ர், ஊணூர், குடந்தை ஆகிய உவமைகளாகப் பயின்று வந்துள்ளன. நற்றிணையில் ஊரின் சிறப்புகளை பற்றி காணலாம்.
|
முக்கிய வார்த்தைகள்: அரசர்கள் ஆட்சி, தொண்டி நகரம், மாந்தை, கொல்லிமலை, எழில்மலை, அகப்பா, நற்றிணைப் பாடல்களில் சோழ மன்னர்கள், ஊர்கள், வெண்ணி, உறந்தை, ஆரேற்று, ஆர்க்காடு, கழாஅர், போஒர், நெடுந்தெரு, பாரத்து, கூடல், ஊணூர், இருப்பையூர், சிறுகுடி, மருங்கூர் நகரம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] கே. கே. பிள்ளை, தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும் ப. 24.
[2] மயிலைசீனி வேங்கடசாமி, சங்க காலத் தமிழக வரலாறு, ப. 45.
[3] டாக்டர். ந. சுப்பிரமணியம், சங்க கால வாழ்வியல் ப. 286.
|