வனக்குறவர் சமூகத்தின் சடங்குசார் ஆற்றுகைகள்: தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகளை மையப்படுத்திய ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-4
Year of Publication : 2020
Authors : Mr. Sundaralingam Chandrakumar


Citation:
MLA Style: Mr. Sundaralingam Chandrakumar "A study focusing on the cultural heritage of the untouchables, the ceremonial rituals of the forest community" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 49-54.
APA Style: Mr. Sundaralingam Chandrakumar, A study focusing on the cultural heritage of the untouchables, the ceremonial rituals of the forest community, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),49-54.

சுருக்கம்:
பூர்வீகக்குடிகளின் வாழ்வியலில் தனித்துவமான பண்பாட்டு மரபுரிமைகள் பல்வகைமை வித்தியாசங்களுடன் பயில்வில் உள்ளன. நாட்டாரியத்துறையில் இதன் ஆராய்ச்சியும் புரிதலும் செயற்படுத்தப்பட்டாலும், ஏனைய துறைகளில் முன்னிலைப்படுத்தப்படுவது குறைவு. தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள்(Intangible Cultural Heritage) குறவர் சமூகத்தின் சடங்குகள், ஆற்றுகைகள், வழக்காறுகள், கொண்டாட்டங்கள் ஆகியவைகளில் அதிகம் வெளிப்படுத்தப்படுகின்றன. இப்பழங்குடிகளின் மரபுரிமைகள் இன்றைய உலகமயமாக்கல் சூழலினாலும்,சமஸ்கிருதமயமாக்கலினாலும்,இனவாத ஆதிக்கத்தினாலும், திறந்த பொருளாதார உருவாக்கத்தினாலும், காலனியத்தின் நாகரிகப்படுத்தல் எனும் மாயையினாலும், வளர்ச்சி, முன்னேற்றம், இலாபம் எனும் இயந்திரத்;தன்மையினாலும் பல வழிகளில் அவர்களது இயற்கையுடன் கூடிய வாழ்வியல் சிதைக்கப்பட்டுசவால்களுக்கு உட்படுத்தப்படுகின்றமை அறிதலுக்குரியது. இவ்வாறான பண்பாட்டு மேலான்மையால் வித்தியாசங்கள் அழிக்கப்பட்டு பொதுத்தன்மை வலுப்பெற்றுள்ளது. இதனால், பொதுப்புத்தியில் தொட்டுணர்பவையே (Tangible) கண்ணுக்குப் புலப்படுகின்றது. கண்ணுக்குப் புலனாவதையே (Intangible) பாதுகாக்கவேண்டும் எனும் செயற்பாட்டில் ஈடுபடும் நிலையும் உள்ளது. கிழக்கிலங்கையில் போரும், இயற்கை அழிவுகளும் ஏற்படுத்திய இடப்பெயர்வினால் வனக்குறவர்களின் கண்ணுக்குப்புலனாகாமரபுரிமைகள் இயல்பாகவே ஆபத்து நிலையை அடைகின்றன. ஆனால், சில பிரதேசங்களில் இவர்களது வாழ்வியல், சடங்கு, கொண்டாட்டம், சட்டம், ஒழுங்கு, தொழில், கலை வெளிப்பாடு என்பவற்றில் வித்தியாசங்களுடன் புழக்கத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கன. இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பல தேவைகளுக்காக வரவழைக்கப்பட்டு வனத்தில் வாழ்ந்த வனக்குறவர் சமூகம் பூர்வீகக் குடிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் தமக்கு வசதியான இடங்களிலும், சிங்கள, தமிழ், முஸ்லீம் ஆகிய இனங்களுடன் இணைந்தும் வாழ்ந்தாலும், இவர்களின் வாழ்வியலில் வெளிப்படும் சடங்காற்றுகைகளிலும் பாரம்பரியத் தொழில் முறைகளிலும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் பலவுண்டு. இது பெரும்பான்மை மதம், மொழி, கல்விமுறைகளால் தாக்கப்பட்டாலும் அம்மக்களின் உணர்வுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாய்வில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீவள்ளிபுரக் கிராமத்தில் வாழும் வனக்குறவர் சமுதாயத்தின் சடங்குசார் ஆற்றுகைகளிலும் தொழில் முறைகளிலும் வெளிப்படும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் எவை என ஆராயப்படுகின்றன. பாரம்பரிய வாழ்வியல் வெளிப்பாடுகளை வலுப்படுத்தும்போதே தொட்டுணராப் பண்பாடு அறிவு முன்னிலை பெற்று, இவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள், உரிமையிழந்தவர்கள் என்பதனை மாற்ற முடியும்.

முக்கிய வார்த்தைகள்:
தொட்டுணராப் பண்பாடு, வனக்குறவர்கள், மரபுரிமைகள், சடங்காற்றுகை.

துணைநூற்பட்டியல்:
[1] குகபாலன்.க.,இலங்கையின் பழங்குடிகள், பரணன் புத்தக நிலையம், கொழும்பு, 2000.
[2] சலீம் ஏ.ஆர்.எம், அக்கரைப்பற்று வரலாறு,நூரி புத்தக இல்லம், அக்கரைப்பற்று, 1990.
[3] பக்தவத்சல பாரதி, பண்பாட்டு உரையாடல்கள் - முன்மொழிவுகள், விவாதங்கள், புரிதல்கள், அடையாளம், திருச்சி மாவட்டம், 2017.
[4] கரசூர் பத்மபாரதி, நரிக்குறவர் இனவரையியல், தமிழினி, மணி ஆப்செட் சென்னை, 2004.
[5] ஆனந்தன்.சி., வயது 57, பாம்பாட்டுதல்,ஸ்ரீவள்ளிபுரம்,காஞ்சிரங்குடா,09.07.2020.
[6] கந்தசாமி.சி., வயது 64, பூசாரி, ஸ்ரீவள்ளிபுரம், காஞ்சிரங்குடா, 09.07.2020.
[7] சின்னம்மா.மா., வயது 45,சாத்திரம் சொல்லுதல்,ஸ்ரீவள்ளிபுரம், காஞ்சிரங்குடா, 07.10.2020.
[8] மீனாட்சி.ர., வயது 50, சாத்திரம் சொல்லுதல், ஸ்ரீவள்ளிபுரம், காஞ்சிரங்குடா, 07.10.2020.