சுருக்கம்:
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனாக அமைவதற்கு அவர்களிடம் காணப்படுகின்ற மொழித்திறன் விருத்தி பெரும் பங்காற்றுகின்றது. ஆனால் இம் மொழித்திறன் விருத்தியானது அனைத்து மாணவர்களிடமும் ஒரே மாதிரியாகக் காணப்படுவதில்லை. அந்தவகையில் கனிஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் மொழித்திறன் பின்னடைவு ஆசிரியரின் வினைத்திறனான கற்பித்தலில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது ஆய்வு செய்யப்படுகின்றது.
ஆய்வினை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மண்முனை வடக்கு கோட்டத்தில் காணப்படும் பாடசாலைகளிலிருந்து வசதி மாதிரியின் அடிப்படையில் ஆறு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அப்பாடசாலைகளில் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 2:1 எனும் விகிதத்தில் 100 மாணவர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையில் ஆறு அதிபர்களும் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 2:1 எனும் விகிதத்தில் 45 ஆசிரியர்களும் 50 பெற்றோர்களும் தெரிவு செய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன. இதனடிப்படையில் அதிபர்கள்;, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆய்வுக் குடித்தொகையினராக கருதப்பட்டு வினாக்கொத்து, நேர்காணல், ஆவணச் சான்றுகள் போன்ற ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி வினாக்கள் அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் வினவப்பட்டு பெறப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள்,சலாகை வரைபுகள் மூலம் காட்டப்பட்டதுடன் போதியளவு வியாக்கியானமும் விதப்புரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் கனிஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் மொழித்திறன் பின்னடைவினால் கற்றலின் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் தெளிவாக வாசிக்காமை, எழுத்துத்; திறன் குறைவு, கிரகித்தலில் இடர்படுதல், பேசுதலில் சிரமப்படுதல் போன்றவற்றை வெளிக்காட்டினார்கள். இத்தகைய நிலையானது ஆசிரியரின் வினைத்திறனான கற்பித்தலில் சிரமங்களை ஏற்படுத்துகின்றது. மாணவர்களின் கற்றலில் பெற்றோர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இதன் பின் முடிவுகளும் விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
|
துணைநூற்பட்டியல்:
[1] Ann O Quigley, 2000. Listening to Childrens Views, Joseph Rowntree foundation.
[2] Arafat Hamouda, 2013. An Investigation of Listening Comprehension Problems Encountered by Saudi students in the EL Listening Class room.
[3] Amin Ali Almubark, 2016. Exploring The Problems Faced by The Teachers in Developing Writing Skills, Jazn university, Saudi Arabia.
[4] Anabela Malpique and Deborah pinco, 2017. To empower students with effective writing skills, handwriting matters.
[5] Bruce Tomblin, 2010. Literacy as an outcome of Language Development and its Impact on children’s Psychosocial and Emotional Development, University of Lowa, USA.
[6] Catherine S. Tamis-Lemonda and Eileen T. Rodriguez, 2009.Parent Role in Fostering young children’s Learning and Language Development, New York University, USA.
[7] Clermont Gauthier and Marital Dembele, 2004.Quality of Teaching and Quality of Education Laval University, Quebec, Canada.
[8] Child Dev, 2011. Article information, University of Pittsburg.
[9] Deborah Loewenberg Ball and Francesca M. Forzani, 2009.The Work of Teaching and the Challenge for Teacher Education, SAGE journals.
[10] Erick Pakulak, 2010. Biological Bases of language Development, University of Oregan, USA.
[11] Frances L. Van Voorhis and Michelle F. Maier, 2003.The Impact of Family involvement on the Education of Children.
[12] Joseph Beitchman, 2010. Language Development and its Impact on children’s Psychosocial and Emotional Development, University of Toronto, Cannada.
[13] Judith Johnston, 2010. Factors that Influence Language Development, University of British Colombia, Canada
[14] James Ko and Pamela Sammons, Linda Bakkum, Effective teaching, Hong Kong institute Education.
[15] Julie Nelson., et.al, 2017. Measuring Teachers, Research Engagement.
[16] Julian Hermida, 2009. The Importence of Teaching Academic Reading Skills in First year University Courses, Algoma University, Canada.
[17] Josephine Atieno ogano, 2012.Teaching with Reading and Writing Problems in the Classroom, University of Oslo.
[18] Kathy Theimann and Steven F. warren. 2010. Programs Supporting young children’s Language Development, University of Kansas, USA.
[19] Karen L. Sanfed,2015. Factors that effect the reading comprehension of Seceretery students with Disabilities, University of Sanfrancisco.
[20] Kamonpan Boonkit, 2010. Enhancing the development of speaking skills for non- native Speakers of English silpakorn university, Thailand.
[21] Kristin Stanberry, Undersanding Language Development in Preschoolers.
[22] Lulgl Girolametto, 2010. Services and Programs Supporting young children’s Language Development, University of Toronto, Canada.
[23] Laura.M.Justice, 2016. Literacy as an outcome of Language Development and its Impact on children’s Psychosocial and Emotional Development, University of Verginia, USA.
[24] Laraib Nasir., et al. 2013. Enhancing Students Creative Writing Skills: An Action Research Project.
|