வள்ளியம்மானையில் அணிப்பிரயோகம் – ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-4
Year of Publication : 2020
Authors : Sivarasa Oshanithi


Citation:
MLA Style: Sivarasa Oshanithi "Valliyammanaiyil anippirayokam - oru ayvu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 23-28.
APA Style: Sivarasa Oshanithi, Valliyammanaiyil anippirayokam - oru ayvu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),23-28.

சுருக்கம்:
மட்டக்களப்புப்பிரதேச மக்கள் மத்தியில் பாரம்பரியமாக ஏட்டுச்சுவடிகள் பேணப்பட்டுவருகின்றன. அவ்வாறான தொருஏட்டுச்சுவடாக இவ்வள்ளியம்மானை காணப்படுகின்றது. இது முருகக்கடவுள்வள்ளியம் மானையைத் திருமணம் செய்தகதையைக் கூறுகின்றது. மட்டக்களப்புச் சித்தாண்டியில் இவ்வள்ளியம்மனை மக்களால் காவியமாகப் பேணப்பட்டு வருகின்றது. முருகன் அரக்கர்களை அழித்துப்போர் புரிந்த வேளையில் வள்ளிமுருகன் அழகில் மயங்கி அவரைத்திருமணம் செய்ய ஆசை கொண்டு தவம்புரிகிறாள். அப்போதுமுருகன் 'இப்பிறப்பில்தான் தெய்வயானையைத் திருமணம் செய்திருப்பதால் அடுத்தபிறவியில் உன்னைத்திருமணம் செய்வேன்' என உறுதியளிக்கிறார். அதன் படி வள்ளி மறு பிறப்பில் மானின் குழந்தையாகப் பிறப்பெடுக்கிறாள். வள்ளியை வேடர்கள் தங்கள் குழந்தையாக வளர்க்கின்றனர். வள்ளி பெண்ணாகவளர்ந்ததும் தினைப்புனம் காவல்காக்கின்றாள். அவ்வேளை முருகன் கிழவனாகவடிவம் கொண்டு இறுதியில் வள்ளியைத் திருமணம் செய்கிறார். இக்கதையை புலவர் சிறந்த அணிகளின் வாயிலாகப் வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் வள்ளியம்மானையில் அணிப்பிரயோகம் – ஓர் ஆய்வு என்னும் இவ்வாய்வானது முருகன் வள்ளி திருமணக்கதையை புலவர் உவமை, உருவகம் என்னும் அணிகளைக்கையாண்டு எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை பகுப்பாய்வு நோக்கிலும் விபரண நோக்கிலும் ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
உவமையணி, உருவகம், உயர்வுநவிர்ச்சி.

துணைநூற்பட்டியல்:
[1] வள்ளியம்மானை ஓலைச்சுவடி
[2] முத்துச்செல்வன்,ஜெ. ,2013,ஓலைச்சுவடிஅறிமுகமும்பாதுகாப்பும்,NoolahamFountation.
[3] உவமையணி, https://store.tamillexicon.com.