ஐங்குறுநூறு பாடலில் பரத்தையரின் ஆளுமை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-3
Year of Publication : 2020
Authors : Dr.K.Dhanalashmi


Citation:
MLA Style: Dr.K.Dhanalashmi "Ikurunuru Padalil Parathaiyarin Allumai" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 91-94.
APA Style: Dr.K.Dhanalashmi, Ikurunuru Padalil Parathaiyarin Allumai, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),91-94.

சுருக்கம்:
ஆளுமை என்பதற்குரிய ‘பெர்சனாலிட்டி’(Personality) என்ற ஆங்கிலச்சொல் (Persona) பெர்சனா என்னும் இலத்தீன் சொல்லிருந்து பிறந்தாகும். இச்சொல்லின் பொருள், அக்காலத்திலிருந்த நாடக நடிகர்கள் தாங்கள் இன்னார் என அடையாளம் தெரியாமலிருக்க அவர்களின் முகத்தை மறைக்கப்பயன்படுத்திய முகமூடி (Mask) என்பதாகும். ஒரு மனிதனின் அகம் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும், புறம் சார்ந்த நாகரிகக் கூறுகளையும் வெளிப்படுத்தி அவன் நடத்தையின் செயல்பாடாகவே இலக்கியங்கள் ஆளுமையை வரையறை செய்துள்ளன. பரத்தையர் இற் பரத்தை அல்லது காமக் கிழத்தியர் எனவும் சேரிப் பரத்தை அல்லது நயப்புப் பரத்தை எனவும் இரு வகைப்படுவர் என்பதை உரையாசிரியர் குறிப்புகளால் அறியலாம்.காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை, நயப்புப்பரத்தை, இற்பரத்தை, இல்லிடப்பரத்தை முதலான பரத்தையர் குறித்த பல்வேறு பெயர்கள் அகப்பாடல்களில் அடிக்குறிப்பில் அதாவது திணைத்துறைக் குறிப்புகளில் காணப்பெறுகின்றன. இப்பெயர்களுள் ஒன்றேனும் மூலப்பாடல்களில் காணப்பெற்றிலது என்பது குறிப்பிடத்தக்கது”1 என்கிறார். சிலம்பு நா. செல்வராசு,இற்பரத்தையாக விளங்குபவர் தலைவன் ஒருவனுக்கே அன்பு பூண்டு ஒழுகுபவளாகவும், சேரி பரத்தையர் பலரிடம் அன்பு கொள்பவளாகவும் விளங்குகின்றனர். குலமகள் என வகைப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு எதிரானதாக பரத்தமை ஒழுக்கம் திகழ்ந்தது.ஐங்குறுநூறு பாடலில் பரத்தையின் ஆளுமையினை காணலாம்.

முக்கிய வார்த்தைகள்:
ஆளுமைக் குறைபாடுடைய பரத்தை, பரத்தையின் கருத்துத்துணிவு ஆளுமை, தலைவன் மீது பரத்தையின் கோபம்.

துணைநூற்பட்டியல்:
[1] சங்க இலக்கிய மறுவாசிப்பு, சமூகவியல் மானிடவியல் ஆய்வுகள் ப. 169
[2] ஐ.இராமராசா, தமிழ் இலக்கியத்தில் ஊடல், பக்.185-186