| மலையகத் தோட்டத் தொழில்முறைமையில் கங்காணி: பஞ்சம் பிழைக்க வந்த சீமை நாவலை அடிப்படையாகக் கொண்டதோர் மதிப்பீடு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-3 Year of Publication : 2020 Authors : Nagarathnam Sudarshini
|

|
Citation:
MLA Style: Nagarathnam Sudarshini "Malaiyahath Thottath Tholilmuraimaiyil Gangani: Bancham Pilaiga Vantha Simai Navalai Adipadaiyahak Kondathir Mathipido" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 66-85.
APA Style: Nagarathnam Sudarshini, Malaiyahath Thottath Tholilmuraimaiyil Gangani: Bancham Pilaiga Vantha Simai Navalai Adipadaiyahak Kondathir Mathipido, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),66-85.
|
சுருக்கம்:
இலக்கியங்கள் அவை தோன்றி காலப் பின்னணியைச் சார்ந்த சமுதாயத்தைப் பிரதிபலிப்பதிலும் சமுதாயத்தின் வாழ்க்கை நிலைகளையும் அச்சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களை வெளிப்படுத்துவதிலும் இன்றியமையாத இடத்தினைப் பெறுகின்றன. சமுதாயம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான நிலைபேறான கூறுகளையும் கால ஓட்டத்தில் மாற்றத்திற்குள்ளாகும் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதால் அக்கூறுகளின் வெளிப்பாடுகளாய் அமையும் படைப்புகளில் அத்தகு மாற்றங்களை செவ்வனே தன் படைப்பில் உள்வாங்குவது படைப்பாசிரியர்களின் கடமையாகின்றது. அந்தவகையில், நாவலானது எழுதப்பட்ட காலத்தின் உண்மையான வாழ்வியலையும், பழக்கவழக்கங்களையும் வெளியிடுவதோடு, மனித வாழ்க்கையின் மதிப்புரையாகவும் திகழ்கின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழில் பிரவேகித்த நாவலானது ஈழத்திலும் முக்கிய பல நாவலாசிரியர்களைத் தோற்றுவித்துள்ளது. அவர்களின் படைப்புகளும் காலம் கடந்தும் கடந்த காலத்தை கண்முன் கட்டமைக்கின்றன. இவ்வடிப்படையில், ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ என்ற நாவல் மலையகத்தைச் சார்ந்த படைப்பிலக்கியவாதியான மு.சிவலிங்கம் 2015 ஆம் ஆண்டு மலையக மக்களின் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் கண்முன் கட்டமைக்கும் வகையில் கட்டமைக்கும் நோக்கில் எழுதப்பட்ட வரலாற்று நெடுங்கதையாகும். இதனை முதன்மை ஆதாரமாகக் கொண்டு மலையகத் தோட்டத் தொழில்முறைமையில் கங்காணிகளின் வகிபாகம் கடமைகள் என்பவற்றையும், பஞ்சம் பிழைக்க வந்த சீமையில் உலவும் கங்காணியின் தனித்துவம் என்பவற்றை மதிப்பீடு செய்யும் மதிப்பீடு செய்யும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: கங்காணிகள், பஞ்சம் பிழைக்க வந்த சீமை, மலையகம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] சாரல் நாடன், (1990) மலையகத் தமிழ் இலக்கியம், ராஜகிரிய தமிழ் மன்றம்.
[2] சிவலிங்கம். மு., (2015) பஞ்சம் பிழைக்க வந்த சீமை, கொட்டகலை: குறிஞ்சித் தமிழ் இலக்கிய மன்றம்.
[3] சிவராஜா.அ., (1992) மலையகத் தமிழரின் வரலாறும் இலக்கியங்களும், கண்டி.
[4] வேலுப்பிள்ளை. ஸி.வி., (1976) மாமன் மகனே – மலைநாட்டு மக்கள் பாடல்கள், கொழும்பு: மாவலிப் பிரசுரம்.
|