மணிமேகலையின் காலம் குறித்த கருத்தாக்கங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-3
Year of Publication : 2020
Authors : Dr.C.Ravisankar


Citation:
MLA Style: Dr.C.Ravisankar "Manimeykalaiyen Kalam Kuritha Karuthakankal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 15-21.
APA Style: Dr.C.Ravisankar, Manimeykalaiyen Kalam Kuritha Karuthakankal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),15-21.

சுருக்கம்:
பௌத்த சமயத்தின் தோற்றத்தையும் அதன் பின்பு அவை தமிழ்நாட்டில் பரவிய விதத்தையும், அதன் காலத்தையும் தெரிந்து கொண்டால் மணிமேகலையின் காலத்தை தெரிந்து கொள்ள முடியும். மணிமேகலையை ஆராய்ந்தால் தொல்காப்பிய காலத்திற்குப் பின்பு தோன்றியது என்று எண்ணமுடிகிறது. ‘கயவாகு’ என்னும் மன்னன் வரலாற்றை வைத்துக் கொண்டு மணிமேகலையின் காலத்தை அளவிடுகிறார். இவர் தருகின்ற சான்றானது “சாத்தனார்” வாய்மொழியால் கண்ணகியின் சிறப்பறிந்த செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபட்டதற்கும், அதற்கு இலங்கை அரசனான கயவாகு மன்னன் வந்திருந்தான் என்பதற்கும் சிலப்பதிகாரமே சான்று என்பதை அறியமுடிகிறது. கிருதகோடி ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை, அவ்வரை பெரிதும் வழக்கிலிருந்த கி.பி.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று மா.இராசமாணிக்கனார் மேற்கோள்காட்டி மணிமேகலை இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்பதை இதன் வழி அறியமுடிகிறது. மணிமேகலை நூல் கி.பி.9-ம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டமை அறியப்படும் என்று உதயணனின் வடமொழிக் கதையைக் கொண்டு விளக்குகிறார். பிற அறிஞர்கள் பல கருத்தை முன் வைத்தாலும் மணிமேகலை பௌத்தம் தமிழ்நாட்டில் உயர்வான மதிப்புடையதாக இருந்த காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற இரண்டாம் நூற்றாண்டு தான் மணிமேகலை இயற்றப்பட்ட காலமாக இருக்க முடியும் என்பதை அறியமுடிகிறது.

முக்கிய வார்த்தைகள்:
ஐம்பெருங் காப்பியங்களும் மணிமேகலையும், ஐம்பெருங்காப்பியங்களும் வைப்பு முறையும், பௌத்தமும் மணிமேகலையும், மணிமேகலை இயற்றப்பட்ட காலம், சிலப்பதிகாரம் மணிமேகலை.

துணைநூற்பட்டியல்:
[1] A History of Tamil Literature 1-1100 AD
[2] தமிழ் மொழி இலக்கிய வரலாறு
[3] S.K.Ayyangar Manimekalai in its Historical Setting p.61-67’
[4] தமிழர் சரிதம்
[5] Manimekalai in its Historical Setting