புதுமை உரையாசிரியர்- தெய்வச் சிலையார் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-3 Year of Publication : 2020 Authors : M.Kayalvizhi
|

|
Citation:
MLA Style: M.Kayalvizhi "Novelty Commentator- Deivaseliyar" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 1-14.
APA Style: M.Kayalvizhi, Novelty Commentator- Deivaseliyar, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),1-14.
|
சுருக்கம்:
இலக்கியம் என்பது படைப்பாளியின் எண்ணங்களின் அழகிய வெளிப்பாடாகும். ஒரு படைப்பாளி தன் வாழ்வில் கண்டு, கேட்டு, அறிந்த நிகழ்வுகளை நல்ல வடிவத்துடன் வெளிப்படுத்தும் போது அது சிறந்த இலக்கியமாகப் பரிணமிக்கின்றது. படைப்பாளியின் முதன்மையான நோக்கம் தான் வெளிப்படுத்தும் கருத்துகள் யாவும் படிக்கும் வாசகனிடம் முழுமையாகப் போய்ச் சேர்தல் வேண்டும் என்பதேயாகும். அவ்வாறு அமையாவிடின் அது அப்படைப்பின் அல்லது படைப்பாளியின் தோல்வியாகவே கருதப்படும். இலக்கியங்களின் முதன்மையான நோக்கம் இன்புறுத்தலே என்ற போதிலும் அவற்றிற்கும் சில சமூகப் பொறுப்புகள் உள. அவற்றில் சில வாழ்வியல் கருத்துகள், சமூகச் சிந்தனைகள், சமகாலப் பதிவுகள், நன்னெறி ஆற்றுப்படுத்தல்கள் போன்றவை இலை மறைவு, காய் மறைவாய் வெளிப்பட்டு நிற்கும் போது அவ்விலக்கியம் செவ்விலக்கியமாகக் கொண்டாடப்படுகின்றது. பொதுவாக இலக்கியங்களைப் படைத்தளிக்கும் இலக்கியவாதிகள் தாம் வாழ்ந்த காலத்தில் அனைவரினும் அறிவிற் சிறந்தோராக விளங்குவர். அவர்கள் படைக்கும் படைப்புகளைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் அவர்களைப் போன்றே அறிவுடையோர்களாக இருப்பர் என்று கருதவியலாது. அவ்வாறான நேர்வில் படைப்பாளிக்கும், வாசகனுக்கும் இடையே பெருத்த இடைவெளி தோன்றிப் படைப்பாளியின் கருத்துகள் முழுமையாக வாசகனைச் சென்றடையாமல் போகக்கூடும். இதை வேறு வகையில் கூறுவதென்றால் படைப்பாளி கூறும் கருத்துகள் யாவும் முழுமையாக வாசகனைச் சென்றடைந்து விடுவதில்லை. அந்நூலில் கூறப்படும் பல்வேறு கருத்துகள், நுட்பங்கள், வடிவங்கள், உத்திகள், மறைமுகப் போக்குகள் போன்றவற்றை எல்லோரும் புரிந்து கொள்ளவியலாத நிலை தோன்றுகின்றது. இவ்வாறான நேர்வில் இக்குறையைப் போக்கத் தோன்றியவையே உரைகளாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: தெய்வச் சிலையாரின் காலம், தெய்வச் சிலையாரின் வாழ்விடம், தெய்வச் சிலையாரின் சமயம் மற்றும் இனம், தெய்வச் சிலையாரின் இலக்கியத் திறன், இலக்கியப் புதுமை, தெய்வச் சிலையாரின் உரைநலம், சூத்திரங்களின் அமைப்பும், அடைவும், தெய்வச் சிலையாரின் சமூக உணர்வு.
|
துணைநூற்பட்டியல்:
[1] ARE-Annual Report on Indian Epigraphy
[2] பரிமணம்.அ.மா.& பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), அகநானூறு, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[3] பரிமணம்.அ.மா. & பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), புறநானூறு, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[4] பரிமணம்.அ.மா. & பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), கலித் தொகை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[5] தொல்காப்பியம்-தெய்வச் சிலையார், (1929), கரந்தை: கரந்தை தமிழ்ச் சங்க வெளியீடு
[6] தொல்காப்பியம்-தெய்வச்சிலையார் உரை. (கு.சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன்), (1963), சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
[7] திருக்குறள், (2006), சென்னை: கௌரா பதிப்பகம்.
[8] திருக்குறள்-மணிவிளக்க உரை (கா.அப்பாதுரையார்), (1967), சென்னை: அலமேலு நிலையம்.
[9] சிலப்பதிகாரம், (1979), சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
[10] மணிமேகலை, (2005), சென்னை: பாரி நிலையம்.
[11] பெரிய திருமொழி, (1956), சென்னை: மர்ரே அண்டு கம்பெனி.
[12] நடராஜன்.தி.சு. (2013), உரைகளும் உரையாசிரியர்களும், சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்.
[13] பாலசுப்பிரமணியன்.சி. (1998), தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை: மணமலர்ப் பதிப்பகம்
|