பத்துப்பாட்டில் ஆயர் வாழ்வியல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-2
Year of Publication : 2020
Authors : M.Kayalvizhi


Citation:
MLA Style: M.Kayalvizhi "Pathupattil Aayar Vazhviyal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 46-52.
APA Style: M.Kayalvizhi, Pathupattil Aayar Vazhviyal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),46-52.

சுருக்கம்:
கால்நடைகளை மேய்த்தல் என்பது உலகில் மிகவும் பழமையான தொழிலாகும். மனிதன் விவசாயம் செய்வதற்கு முன் இத்தொழிலைத்தான் செய்து வந்தான். மனிதன் புரிந்த முதல் தொழில் என்றுகூட இதனைக் கொள்ளலாம். ஆடு மாடுகளை மேய்த்தல் என்பது நாடோடி வாழ்க்கையைச் சார்ந்தது. அவ்வாழ்க்கை பெரும்பாலும் காட்டுப்பகுதியைச் சார்ந்தது என்பதுடன் நிலையற்றதுமாகும். மேலும் அது ஆபத்து நிறைந்தது. கால்நடைகளை மேய்த்தவர்கள் ஆயர் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். மத்திய ஆசியாவிலிருந்து கால்நடைகளை மேய்த்துக்கொண்டு இந்தியா வந்த ஆரிய இனத்தவர்கள் அனைவருமே ஒருவகையில் பார்த்தால் ஆயர்களே. இவர்கள் அனைவருமே மேய்ச்சல் தொழில் செய்த நாடோடி இனத்தவர்களே. தமிழ்நாட்டில் இம்மேய்ச்சல் இனத்தவர்கள் “ஆயர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டன. சங்கக் காலத்தில் கால்நடைகள் மதிப்பு மிகு செல்வமாகக் கருதப்பட்டது. அவற்றை உரிமையாகக் கொண்டிருந்த ஆயர்கள் செல்வந்தர்களாகப் போற்றப்பட்டனர். அம்மக்களின் உடல் பொருள் ஆவி அனைத்துமே கால்நடைகளையே சார்ந்திருந்தன. இத்தகு ஆயர்கள் வாழ்ந்த பகுதி முல்லை நிலம் என்று அழைக்கப்பட்டது. இவர்களின் செவ்விய வாழ்வியல் நிலையைப் பத்துப்பாட்டு என்ற சங்க நூல் அழகாக எடுத்துரைக்கிறது. கால்நடைப் புரவலர்களான முல்லை நில ஆயர் தம் வாழ்க்கை முறை மிகவும் சிறப்பான ஒன்று. அவற்றை இங்கு ஆராய்வோம்.

முக்கிய வார்த்தைகள்:
ஆயர்களின் முல்லை நிலம், ஆயர்களின் வாழ்வியல் நிலை, ஏற்றமிகு ஆயர்களின் தொழில், ஆயர்களின் பழக்க வழக்கங்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), பெரும்பாணாற்றுப் படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[2] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), பொருநராற்றுப்படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[3] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), திருமுருகாற்றுப் படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[4] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), சிறுபாணாற்றுப் படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[5] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),மலைபடு கடாம், சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[6] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),முல்லைப் பாட்டு , சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[7] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),மதுரைக் காஞ்சி சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[8] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),நெடுநல் வாடை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[9] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),குறிஞ்சிப் பாட்டு சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[10] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி)(2007),பட்டினப் பாலை சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[11] தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம், (1983), சென்னை: தமிழ் நாட்டு பாடநூல் நிறுவனம்.
[12] பிள்ளை.கே.கே.(2013), தமிழக வரலாறு மக்களும் பண்பாடு, சென்னை: உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்.
[13] Pillai.K.K.(1969) A Social History of The Tamils, Chennai: University of Madras.
[14] Swaminathan.A, (1991),Social and Cultural History of Tamil Nadu, Chennai: Deepa Publications.