சோழத் திருநாட்டில் வைணவம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-2
Year of Publication : 2020
Authors : M.Kayalvizhi


Citation:
MLA Style: M.Kayalvizhi "Vaishnavisim in Chola Kingdom" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 20-26.
APA Style: M.Kayalvizhi, Vaishnavisim in Chola Kingdom, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),20-26.

சுருக்கம்:
சைவமும், வைணவமும் இந்து சமயத்தின் இரு கண்களாகும். வைணவம் திருமாலை வழிபடு தெய்வமாகக் கொண்டது. தமிழர்கள் வைணவத்தைச் சங்க காலம் தொட்டே போற்றி வந்துள்ளனர். திருமால் மாயோன், மாயவன், மாயன் என்றெல்லாம் சங்க இலக்கியங்களால் அழைக்கப்பட்டான். சங்க காலத்துப் பின் வந்த பல்லவர் காலத்தில் இவ்வழிபாட்டு முறையானது முழுமையடைந்தது. வைணவ சமயம் அதன் பின் வந்த சோழர் காலத்தில் தன் பொற்கால நிலையை எட்டியது. வைணவத்தை வளர்த்த ஆழ்வார்கள் பெரும்பான்மையானோர் பல்லவர் காலத்தில் வாழ்ந்திருந்தாலும் அவர்களின் பாக்கள் யாவும் சோழர் காலத்தில்தான் தொகுக்கப்பட்டன. மேலும் பல புதிய வைணவ ஆலயங்கள் இக்காலத்தில்தான் கட்டப்பட்டன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது வைணவ சமயம் சோழர் காலத்தில்தான் முன் எப்போதும் இராத வளர்ச்சியடைந்தது உறுதியாகின்றது. தீவிர சைவர்களான சோழ மன்னர்கள் வைணவத்தை முனைப்புடன் ஆதரித்துப் போற்றியது வரலாற்றில் வியப்புக்குரிய நிகழ்வாகும். தமிழர்கள் சமயப் பொறை மிக்கவர்கள் என்ற கூற்றை நிருபிக்கும் செயலாகவே இதைக் கொள்ளவேண்டும். சோழ மன்னர்களின் மட்டற்ற ஆதரவால் வைணவ சமயம் தன் சிறப்பான பொற்கால நிலையை எட்டிற்று.

முக்கிய வார்த்தைகள்:
சோழ மன்னர்களின் வைணவ ஆதரவு, வைணவத் திருமடங்களின் பணிகள், வைணவ இலக்கியங்களின் வளர்ச்சி, ஆச்சாரியர் இராமானுஜர்.

துணைநூற்பட்டியல்:
[1] Neelakanta Sastri.K.A, (1975), The Cholas, Chennai: University of Madras.
[2] Neelakanta Sastri.K.A, (1939), Studies in Cola History and Administration, Chennai: University of Madras, Chennai.
[3] Pillai.K.K, (1975), A Social History of The Tamils, Chennai: University of Madras.
[4] Swaminathan.A, (1991), Social and Cultural History of Tamil Nadu, Chennai: Deepa Publications.
[5] Krishnaswami Aiyangar.S, Sri Ramanujacharaya-A Sketch of His Life and Time, Chennai: G.A.Natesan & Co Publishers.
[6] பிள்ளை.கே.கே. (1977), தமிழ் நாட்டு வரலாறு- மக்களும் பண்பாடும், சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
[7] சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை, (2008), பிற்காலச் சோழர் சரிதம், சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
[8] பிள்ளை.கே.கே. (1997), சோழர் வரலாறு, சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
[9] பாலசுப்பிரமணியம்.மா, (1979), சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு, சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
[10] பிள்ளை.கே.கே, சோழர் வரலாறு.ப:614.
[11] Neelakanta Sastri.K.A, The Colas.P:638.
[12] பாலசுப்பிரமணியம்.மா,சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு, (பாகம்:II), ப:370.
[13] Krishnaswami Aiyangar.S, Sri Ramanujacharaya, P:24.