வாரிக் கொடுத்த கடையெழு வள்ளல்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-1
Year of Publication : 2020
Authors : M.Kayalvizhy


Citation:
MLA Style: M.Kayalvizhy "Varikkodutha Kadaiezhu Vallalgal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I1 (2019): 55-61.
APA Style: M.Kayalvizhy, Varikkodutha Kadaiezhu Vallalgal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i1),55-61.

சுருக்கம்:
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” (குறள்:231)
என்றார் வள்ளுவர் பெருந்தகை. பிறருக்கு ஈந்து வாழும் வாழ்வே மனித வாழ்வுக்கு ஊதியமாக அவர் கருதினார். ஈதல் அல்லது கொடை என்பதை நம் அறிவு சார்ந்த முன்னோர்கள் வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகக் கருதினர். எனவேதான் விருந்தோம்பல் என்ற பண்பாடு பழந்தமிழரிடத்து சிறந்து விளங்கியது. கொடையும், விருந்தோம்பலும் இவ்வுலக வாழ்வுக்கு மட்டுமல்லாது மேலுலக வாழ்வுக்கும் பயன்தரத்தக்கது என்பதே தமிழரின் கோட்பாடு. இவற்றால்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் பல்லாற்றானும் இது குறித்து மக்களுக்கு அறிவுருத்தியது. அறிவு சார்ந்த நம் முன்னோர்கள் இவ்விதமான கொடை வாழ்வு வாழ்ந்து சிறந்த கொடையாளிகள் என்று பெயர் பெற்றனர். கொடையாளி என்றவுடன் படித்தவன் முதல் பாமரன் வரை மகாபாரதத்தின் கர்ணனையே சுட்டுவர். ஆனால் அவனை விட பன்மடங்கு கொடை உள்ளம் கொண்ட கடையெழு வள்ளல்களையும், குமணன், நல்லியக்கோடன் போன்ற கொடையாளிகளையும் இன்னமும் முழுமையாக தமிழுலகம் அறியாதது வியப்புக்குரியது.

முக்கிய வார்த்தைகள்:
கடையேழு வள்ளல்கள், பாரி, மலையமான் காரி, ஆய், அதியமான், நள்ளி, வல்வில் ஓரி, பேகன்.

துணைநூற்பட்டியல்:
[1] Pillai.K.K.(1969) A Social History of The Tamils, Chennai: University of Madras.
[2] Swaminathan.A,(1991),Social and Cultural History of Tamil Nadu, Chennai: Deepa Publications.
[3] பிள்ளை.கே.கே. (1977) , தமிழ் நாட்டு வரலாறு- மக்களும் பண்பாடும், சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
[4] தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்,(1983),சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
[5] அகநானூறு,(2007),சென்னை, நியூ சென்சூரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
[6] புறநானூறு, (2007),சென்னை, நியூ சென்சூரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
[7] நற்றிணை, (2007),சென்னை, நியூ சென்சூரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
[8] குறுந்தொகை,(2007),சென்னை, நியூ சென்சூரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
[9] சிறுபாணாற்றுப் படை,(2007),சென்னை, நியூ சென்சூரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்.