சங்க இலக்கியத்தில் கார்த்திகை விளக்கு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-1
Year of Publication : 2020
Authors : Dr.V.Ramarajapandiyan


Citation:
MLA Style: Dr.V.Ramarajapandiyan "Sanga Ilakkiyathil Karthigai Vilakku" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I1 (2019): 33-39.
APA Style: Dr.V.Ramarajapandiyan , Sanga Ilakkiyathil Karthigai Vilakku, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i1),33-39.

சுருக்கம்:
மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சமுதாயத்தில் நிலவுகின்ற பண்பாடுகள், பழக்கவழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவற்றிலும் நம்பிக்கைகள் எனும் போது, அதன் மீது நாட்டம் செலுத்தவே எண்ணுகின்றனர். நம்பிக்கைகளை காலந்தோறும் பின்பற்றுவதோடு, அதற்கான காரணகாரியங்களை பின்பற்றி விழாக்களாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். காலந்தோறும் விழாக்கள் என்பது மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. விழாக்கள் ஒவ்வொன்றும் ஒருவிதமான நம்பிக்கைகளை மையமாக வைத்தே நடத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றிலும் தமிழர்கள் என்றாலே விழாக்களினை காரணகாரியத்தோடு சிறப்பாக தொடர்ந்து நடத்திக்கொண்டு வருபவர்கள். அந்த வகையில் கார்த்திகை விழா என்பது இன்றள்ள, நேற்றள்ள, சங்ககாலம் முதற்கொண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சங்ககாலம் தொடங்கி இன்று வரை கார்த்திகை விழாவானது தொடர்ந்து நடந்துகொண்டு வந்துள்ளது. சங்க இலக்கியங்களில் கார்த்திகை விழாவிற்கான இடம் எவ்வாறு இருந்துள்ளது என்பதினை அறிவதற்காக “சங்க இலக்கியத்தில் கார்த்திகை விளக்கு” என்னும் பொருண்மையில் இக்கட்டுரையானது முயல்கிறது.

முக்கிய வார்த்தைகள்:
விழா நாள், கார்த்திகை விளக்கு விழா, விளக்கேற்றும் முறை, கார்த்திகைச் சாறு, உழவர்களுக்கு உதவும் கார்த்திகை தீபம்.

துணைநூற்பட்டியல்:
[1] தமிழண்ணல், (ப.ஆ), சங்க இலக்கியம் மக்கள் பதிப்பு வரிசை, கோவிலூர் மடாலயம், கோவிலூர். (முதற்பதிப்பு – ஏப்ரல், 2003).
[2] க.காந்தி, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. முதற்பதிப்பு – 2008.
[3] அறவாணன்.க.ப, கார் நாற்பது, தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, சென்னை. முதற்பதிப்பு – 2010.
[4] அறவாணன்.க.ப, களவழி நாற்பது, தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, சென்னை. முதற்பதிப்பு – 2010.
[5] தினமணி நாளிதழ். 20.11.2013.