சங்க இலக்கியத்தில் பெண் வாயில்களின் ஆளுமைப் பண்புகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-1 Year of Publication : 2020 Authors : K. Dhanalakshmi
|

|
Citation:
MLA Style: K. Dhanalakshmi "Sanga Ilakkiyathil Pen Vayilgalin Aalumai Panbugal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I1 (2019): 15-25.
APA Style: K. Dhanalakshmi, Sanga Ilakkiyathil Pen Vayilgalin Aalumai Panbugal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i1),15-25.
|
சுருக்கம்:
ஆளுமை என்பது Personality என்னும் சொல் ‘Persona’ என்னும் இலத்தீன் சொல்லிருந்து பிறந்தாகும். “தனிமனிதனுடைய எண்ணங்கள், செயல்படும் முறை, நடத்தைகள், அவன் பிறருடன் பழகும் முறை, மனப்பான்மைகள், அவனுடைய வாழ்க்கைத் தத்துவம், அறிவாற்றல், உணர்ச்சிகள் ஆகிய யாவும் சேர்ந்த தொகுப்பிலிருந்து அவனுக்கு ஏற்படும் தனித்தன்மை ஆளுமை”1 ஆளுமை என்றவுடன் நாம் நினைப்பது உடலமைப்பைத்தான். ஆனால் அது மட்டுமே ஆளுமை அல்ல. ஒருவரின் உள்ளே ஒளிந்திருக்கும் ஒவ்வொரு திறமையும் ஆளுமையாகும். ஆளுமை என்பது “ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத்தொகுப்பு”2. என்று க்ரியாவின் தமிழ் அகராதி பொருள் கூறியுள்ளது. அக்காலக் கட்டங்களில், நடித்தவர்கள் நாடக மேடைகளில் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு முகமூடி அணிந்து நடிப்பதைக் குறிக்கும். பர்சனாலிட்டி என்னும் சொல் தோன்றிய காலத்தில் ஒருவனது பண்புகளைக் குறிக்கும் வெளித்தோற்றம் என்பதாக இருந்தது. ஆனால் இன்று ஆளுமை என்ற சொல் வழக்கில் பல பொருள்களில் எடுத்தாளப்படுகிறது. உளவியல் அகராதி, ஆளுமை என்றால் நன்றாகவும் அழகாகவும் திடமிக்கவராகவும் இயல்பு நேர்மை நட்புணர்வு, அன்பு, பொறாமை, ஊக்கம், அச்சம், இறக்கம், நன்றியுணர்வு, தந்திரம் போன்ற பண்புகளைக் கொண்ட இயல்பும் நடத்தையும் சேர்ந்த மொத்த கலவை என்று குறிப்பிடுகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: “வாயில்கள்” பற்றிய விளக்கம், தோழியின் ஆளுமைப் பண்புகள், சூழலுக்கு ஏற்றப்படி விளிப்பாக இருந்தல், தோழியின் கடமை உணர்வு, அறிவுத்திறன், தலைமக்கள் வாழ்வில் நற்றாய், செவிலியின் ஆளுமை, பாடினி, பாடியின் பாடல் திறன் வலிமை, சங்க இலக்கியத்தில் விறலி, விறலியின் ஏற்பு ஆளுமை.
|
துணைநூற்பட்டியல்:
[1] வாழ்வியல் களஞ்சியம், தொகுதி 2, ப. 678.
[2] க்ரியாவின் தமிழ் அகராதி, ப.121.
[3] தமிழகராதி, ப. 3602.
[4] அபிதான சிந்தாமணி ப. 1410.
[5] சரளாஇராஜகோபலான், சங்க இலக்கியத்தில் தோழி , ப. 15.
[6] சரளா இராசகோபாலன சங்க இலக்கியத்தில் தோழி ப. 10.
[7] இரா.காஞ்சனா,ஆளுமை வளர்ச்சியும் ஆளுமைக் கோட்பாடுகளும் ப. 17.
[8] ஜோ.அருணாதேவி, தொல்காப்பியரின் உளவியல் பார்வை, ப. 96.
[9] சு. கலைவாணி, தமிழ்கலை சங்க இயல் இசை ப. 89.
[10] சங்க இலக்கியத்தில் குடும்பம், பக்தவச்சலபாரதி, ப. 49.
[11] கே. ஏ. குணசேகரன், சங்க இலக்கியச் சிந்தனைகள், ப. 84.
[12] பா.பாணர், இரா. இளங்குமரன், ப. 49.
[13] ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் ப. 158.
|