பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் அறத்தொடு நிற்றல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-1
Year of Publication : 2020
Authors : Dr.P.Sumathi


Citation:
MLA Style: Dr.P.Sumathi "Pathinenkilkanakku Aganoolgal Araththodu Nitral" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I1 (2019): 1-6.
APA Style: Dr.P.Sumathi, Pathinenkilkanakku Aganoolgal Araththodu Nitral, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i1),1-6.

சுருக்கம்:
சங்கம் மருவிய கால நூல்கள் என்றழைக்கப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஆறு நூல்கள் அகம் பற்றி கூறுகின்றன. ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது ஆகிய ஆறு நூல்களும் சங்க இலக்கியப் பாடல்களை சுருங்கிய வடிவில் தருகின்றன. அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் அகத்திற்கும் முக்கியத்தும் கொடுக்கப்பட்டதை அக நூல்களின் தோற்றம் குறிப்பிடுகின்றன. தமிழர்களின் பண்பாட்டின் தனித் தன்மையைப் பறைசாற்றுவதற்குக் காரணம் அக இலக்கிய மாந்தர்கள் இயற்பெயர் சுட்டப் பெறாமல் பொதுப் பெயரால் சுட்டப் பெறும் மரபு என்பது குறிப்பிடத்தக்கது. குறிஞ்சிக்கு புணர்தலும் புணர்தல் நிமித்தமும், முல்லைக்கு இருத்தலும் இருத்தல் நிமித்தமும், மருதத்திற்கு ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தலுக்கு இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்று அக மாந்தர்களின் வாழ்க்கையில் உரிப்பொருள்கள்; கட்டமைக்கப்படுகின்றன. அதில் அறத்தொடு நிற்றல் ஆராயப்படுகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
அகத்திணை மரபு, களவு மணம், கற்பு மணம், அறத்தொடு நிற்றல்.

துணைநூற்பட்டியல்:
[1] இளம்பூரணர்(உ.ஆ)., தொல்காப்பியம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1953.
[2] சிதம்பரனார்.சாமி. தொல்காப்பியத் தமிழர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. ஆகஸ்ட்.2008.
[3] நடராஜபிள்ளை.அ(உ.ஆ) திணைமாலை நூற்றைம்பது, திருநெல்வேலி தென்னிந்திய.
[4] சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.2007.
[5] மாணிக்கம்.வ.சுப தமிழ்க் காதல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.2007.
[6] ஜெயபால்.இரா.(உ.ஆ) அகநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2004.