திருக்குறள் வலியுறுத்தும் கொல்லாமை அறம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-3
Year of Publication : 2024
Authors : M. Kayalvizhi


Citation:
MLA Style: M. Kayalvizhi, "Thirukkural emphasizes the non-killing virtue" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 16-21.
APA Style: M. Kayalvizhi, Thirukkural emphasizes the non-killing virtue, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 16-21.

சுருக்கம்:
இந்தப் பூவுலகில் மனிதனே தலைசிறந்த படைப்பாவான். பகுத்தறிவு (Rational)என்ற ஆற்றல் அவனை இந்நிலைக்கு உயர்த்திற்று. மனித உடலின் கட்டமைப்பைக் கூர்ந்து நோக்கும் எவரும் அது சைவ உணவை உட்கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டதை எளிதில் உணர்வர். மனிதனது கைநகங்களின் அமைப்பும், பல் அமைப்பும் அவன் சாகப்பட்சிணி என்பதை உணர்த்தும். இதனால் தான் வள்ளலார் முதலிய அருளாளர்கள் கொல்லாமையை உலக உயிர்கட்கு உணர்த்திவிட்டுச் சென்றனர். உலக மக்கள் உயர்வதற்காகத் திருக்குறள் என்ற உலகப்பொதுமறையை உருவாக்கியளித்த வள்ளுவர் பெருந்தகையும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இதையே ஆழமாக வலியுறுத்துகின்றார். கொல்லாமையையும் புலால் மறுத்தலையும் அவர் வலியுறுத்தித் திருக்குறளில் அதற்கென தனி அதிகாரங்கள் வகுத்தளித்தார். இந்நூலைக் கற்கும் உயிர்கள் இவற்றால் வீடுபேற்றை அடைந்து உய்வுபெறும் வழியினிற்கு ஆற்றுப்படுத்துகின்றார்.கொல்லாமை என்பதை அறமாகவும், நோன்பாகவுமே அன்னார் கருதினார். அவற்றைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முக்கிய வார்த்தைகள்:
திருக்குறள், அறம், சைவ, பகுத்தறிவு, வள்ளலார், உயிர், மக்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] திருக்குறள்-புலியூர் கேசிகன் உரை, 2009, சென்னை, பூம்புகார் பதிப்பகம்
[2] திருக்குறள்- பரிமேலழகர் உரை, 2009, சென்னை, சாரதா பதிப்பகம்
[3] திருக்குறள்-தெளிவுரை-மு.வரதராசன்உரை, 1949,சென்னை,
[4] திருநெல்வேலிசைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.