வெந்தீ நாவல் - மொழிநடை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-3
Year of Publication : 2021
Authors : S.Abila Sundari


Citation:
MLA Style: S.Abila Sundari "Wendy's Novel - Language" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 43-49.
APA Style: S.Abila Sundari, Wendy's Novel - Language, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 43-49.

சுருக்கம்:
வெந்தீ நாவலின் ஆசிரியர் ரகுதேவன். இவர் சேலம் மாநகரைச் சேர்ந்தவர். இவர் வீரியமிக்க படைப்பாளி. தலித்தியத்தை உள்வாங்கி செரித்து அதன்வழி தன்னுடைய படைப்புக்களை முன்வைக்கும் படைப்பாளியாக அடையாளப்படுத்தப்படுகிறார். தலித் இலக்கியத்தின் இரண்டாம் தலைமுறை எழுத்தாளரான இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம், உரையாடல் என பல்வேறானப் படைப்புக்களைப் படைத்தவர். தலித்திய உணர்வு இவரது படைப்புகளில் மிளிர்கின்றன. இவருடைய படைப்பின் கரு முழுமையும் களப்பணி தகவல்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை என்பதை ஆசிரியரின் நூல்களின் தகவல்கள் வாயிலாக அறிய முடிகிறது. அந்தவகையில் வெந்தீ நாவலில் காணப்படும் சொல்லாடல்கள், பழமொழிகள், நம்பிக்கைகள், விடுகதைகள், பாடல்கள், வட்டார வழக்குகள், கொச்சைச் சொற்கள் போன்றவற்றின் வாயிலாக தலித் மக்களின் மொழிநடையை இக்கட்டுரை ஆராய்கின்றது.

முக்கிய வார்த்தைகள்:
நாட்டுப்புறப் பாடல்கள், தாலாட்டு, விளையாட்டுப் பாடல், ஒப்பாரி, மழைப்பாடல், பழமொழிகளும் சொலவடைகளும், பிறமொழிச் சொற்கள், வட்டார வழக்குச் சொற்களும் மொழியும், வினாநடை.

துணைநூற்பட்டியல்:
[1] ஜெ.நீதிவாணன், நடையியல்,ப. 3 [2] மேலது, ப.7
[3] மா.இராமலிங்கம், நாவல் இலக்கியம், ப.160
[4] வெந்தீ , ப.82
[5] மேலது,ப.82
[6] தே.ஞானசேகரன், மந்திரம் சடங்குகள் சமயம், ப.188
[7] வெந்தீ, ப.143-144
[8] மேலது, ப.56
[9] சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு, ப.112
[10] மேலது, ப.114
[11] பெ.கோ.சுந்தரராஜ், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும், ப.218
[12] சா.கந்தசாமி,(தொகுப்பு), 20 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சிறுகதையாசிரியர்கள், ப.213
[13] ஜெ.நீதிவாணன், நடையியல், ப.44