சமகால போக்கினைப் பேசும் சமூக ஊடகமாகத் தெருக்கூத்து


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-3
Year of Publication : 2021
Authors : Karalasingam Atputhan


Citation:
MLA Style: Karalasingam Atputhan "Street as a social media that speaks to the contemporary trend" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 1-7.
APA Style: Karalasingam Atputhan, Street as a social media that speaks to the contemporary trend, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 1-7.

சுருக்கம்:
இவ்வாய்வனது தமிழ் நாட்டின் பாரம்பரிய கலைவடிவமாக பேணப்பட்டு வருகின்ற தெருக்கூத்தானது தன்;னகத்தே பேசுகின்ற சமூகப் போக்கினைப் ஆராய்வதாக அமைகிறது. மக்களிடம் இலகுவாக கருத்துக்களை கொண்டு செல்கின்ற இக்கலை வடிவமானது தற்கால சூழலுக்கு பெருத்தமான போக்கினையுடைய ஊடகமாக தெருக்கூத்து கலை திகழ்கின்றமை காணமுடிகின்றது. இத்தகு பண்பினை தன்னகத்தே கொண்டுள்ள தெருக்கூத்தானது பெண்களின் கற்புஇ தார்மீக சிந்தனைகள்இ சுயமனித ஒழுக்கம்இ சமுக ஒழுக்கம்இ அரசியல்இ கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் போன்ற பல விடயங்களை பேசு பொருளாகக் கொண்டிருக்கின்றது. தெருக்கூத்தினையும் சிலப்பதிகாரத்தினையும் ஒப்பீடு செய்த சண்முகப்பிள்ளை.எம். என்பவர் சிலப்பதிகாரத்தினை தெருக்கூத்தின் முன்மாதிரி வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். இக்கலை வடிவமானது பல்வேறுபட்ட சமகாலத்திற்குப் பொருத்தமான கருத்துக்களையும், சிந்தனைகளையும், சமூகப் பிரச்சினைகளையும் உட்பொருளாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சமகால போக்குகளை சிறப்பான முறையில் அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் இக்கலை வடிவமானது வெளிப்படுத்தி நிற்கின்றமை சிறப்பிற்குரியது. அந்த வகையில் இவ்வாய்வானது “கற்புக்கரசி கருணாம்பிகை திருமணமென்னும் வினாஜபாலன் பட்டாபிசேகம்” எனும் நாடகப் பனுவலின்; மையக்கருவாக விளங்கும் கற்பு, அதன் முக்கியத்துவம், கற்பினை காப்பதற்காக பெண்கள் எதிர் கொள்ளும் சவால்களையும் ஆராய்வதாக இவ்வாய்வு அமைவதுடன்; என்பதும் எவ்வாறான சமகால சிந்தனைகளை பேசு பொருளாக கொண்டமைகின்றது என்பதனையும் ஆய்வு செய்வதோடு இன்றைய சமூகப் போக்கினை பேசும் கருவியாக எவ்வாறு அமைந்து காணப்படுகிறது என்பதனை ஆராய்வது ஆய்வின் நோக்கமாகும். சமகால போக்குகளை வெளிப்படையாகவும், குறியீடாகவும் கலைவடிவம் சிறப்பாக பேசுகின்றது என்ற கருதுகோளின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுவதுடன் அதில் உட்பொதிந்துள்ள சமூக மாற்றத்திற்கான கருத்துக்களையும் கண்டறிவதாக இவ்வாய்வு அமைகின்றது. “கற்புக்கரசி கருணாம்பிகை திருமணமென்னும் வினாஜபாலன் பட்டாபிசேகம்” எனும் நாடகப் பனுவலை ஆய்வு செய்வதனூடாக தரவுகள் சேகரிக்கப்பட்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
பனுவல், பாரம்பரியம், சிந்தனைக் கருத்துக்கள், சமகாலப் போக்கு, நாடகம். கருவி.

துணைநூற்பட்டியல்:
[1] Abimathi Jeevanadan: : தெருக்கூத்தை கொண்டாவோம், (https://roar.media/tamil/main/arts-culture/celebrate-the-art-of-koothu), 2020
[2] Asianet Tamil, first publication, Chennai (https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/life-of-dissolving-street-artists-families-with-no-income-pvbg4p), 2019.
[3] Green, Jesse, Review: A room in India overflows with astonishing visions, the New York time, 2017.
[4] Pushparani, தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள், International Refereed Journal of Tmil Research,(Volume 1), www.irjtsjournal.org, 2019.
[5] Varathpande, Monohar Laxman, History of Indian theatre, Abhinav publications, 1990.
[6] பெரியசாமி.பி.முனைவர்.தொல்காப்பியம் சுட்டும் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள், International Refereed Journal of Tmil Research,(Volume 2), www.irjtsjournal.org, 2020.
[7] தெருக்கூத்து பனுவல் - “கற்புக்கரசி கருணாம்பிகை திருமணமென்னும் வினாஜபாலன் பட்டாபிசேகம்”இ தமிழ் நாடுஇ இந்தியா.
[8] கோ.சுப்பிரமணியம்இ தெருக் கூத்தும் பார்வையாளர்களும் இதமிழ்ச் சுரங்கம்.காம் (http://www.tamilsurangam.in/general_knowledge/research_ideas/research_ideas_37.html), 2021.