தமிழில் அறிவியல் தொடர்பாடல் வளர்ச்சிக்கு சாமுவேல் ஃபிஷ் கிறீனின் ஒலிபெயர்ப்புப் பணிகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-2
Year of Publication : 2021
Authors : Markandan Rubavathanan


Citation:
MLA Style: Markandan Rubavathanan "The Transliteration work of Samuel Fish Green in the development of scientific communication in Tamil" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 86-92.
APA Style: Markandan Rubavathanan, The Transliteration work of Samuel Fish Green in the development of scientific communication in Tamil, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 86-92.

சுருக்கம்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் அறிவியல் தொடர்பாடல் பணியில் தம்மை அர்ப்பணித்து இயங்கிய அமெரிக்க வைத்திய மிஷனறியான சாமுவேல் ஃபிஷ் கிறீனின் அறிவியல் தமிழ்க் கலைச்சொல்லாக்கப் பணிகளுள் ஒரு வகையான ஒலிபெயர்ப்புப் பணிகள்பற்றி மதிப்பிட இவ்வாய்வுக்கட்டுரை முனைகிறது. கிறீன் தாம் மானிப்பாயில் ஆரம்பித்த வைத்தியக் கல்லலூரியில் ஆங்கில மொழிமூலம் வைத்தியக் கல்விகற்ற தமது மாணாக்கரின் உதவியுடன் தமிழ் மொழிமூல மருத்துவக் கல்லூரியைத் தொடர்ந்ததோடு,தமிழில் மருத்துவக் கல்விக்கான நூல்களை ஆக்கியும் மொழிபெயர்த்தும் அளப்பரிய பணிகளைச் செய்தார். அப்பணிகளில் ஓரங்கமாக ஒலிபெயர்ப்புப் பணிகளும் அமைந்துள்ளன. அவ் ஒலிபெயர்ப்புப் பணிகள் பற்றி, அவற்றின் சிறப்புத்தன்மைகள், ஒலிபெயர்ப்புக் கொள்கைகள் மற்றும் முறைகள் பற்றி மொழியியல் மற்றும் தமிழ் இலக்கணவியல் அடிப்படையில் ஆய்வு செய்வது இவ் ஆய்வின் முக்கிய நோக்கமாகும். இதற்காக அவர் ஆக்கிய, மொழிபெயர்த்த நூல்களிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு அவை பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ் இலக்கணப் பாரம்பரியங்களைப் பின்பற்றித் தமது ஒலிபெயர்ப்பு வேலைகளைச் செய்துள்ளதோடு, காலமாற்றத்திற் கேற்பத் தமிழ் ஒலியியல் வரண்முறைகளும் மாறவேண்டும் என்ற அவசியத்தையும் கிறீன் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்திருந்ததையும், தொடர்ந்துவரும் காலங்களில் ஒலிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளவர்களுக்கு இவரது முயற்சிகள் வழிகாட்டிகளாக இருந்துள்ளன என்பதையும் இவ்வாய்வு முடிவுகள் புலப்படுத்;திநிற்கின்றன.

முக்கிய வார்த்தைகள்:
ஒலிபெயர்ப்பு, ஃபிஷ் கிறீன், அமெரிக்கன் மிசனறி, அறிவியல் தமிழ், கலைச்சொல்லாக்கம்.

துணைநூற்பட்டியல்:
[1] அரங்கன், கி. (1999). “முன்னுரை” பொருள் புதிது வளம் புதிது (சுந்தரம். இராம.). தஞ்சாவூர்: வசந்தம்.
[2] இராதா, செ. (1985). கலைச் சொல்லாக்கம். சென்னை.
[3] கருணாகரன்,க. (1981) மொழிவளர்ச்சி.சிதம்பரம்: மணிவாசகர் நூலகம்.
[4] கிறீன், ச.பி. (1857).அங்காதிபாத சுகரணவாத உற்பாலன நூல்.சென்னை: அமெரிக்க மிஷன் அச்சகம்.
[5] கிறீன், ச.பி. (1872) வைத்தியாகரம்.நாகர்கோவில்: லண்டன் மிஷன் அச்சகம்.
[6] கிறீன், ச. பி. (1875). கெமிஸ்தம்.நாகர்கோவில்: லண்டன் மிஷன் சங்கம்.
[7] கிறீன், ச. பி. (1883). மனுஷசுகரணம்.மானிப்பாய்: அமெரிக்க மிஷன் அச்சகம்.
[8] கணபதிப்பிள்ளை, க. (1962).ஈழத்து வாழ்வும் வளமும்.சென்னை: பாரிநிலையம்.
[9] குழந்தைசாமி, வா. செ. (1985). அறிவியல் தமிழ்.சென்னை: பாரதி பதிப்பகம். ப.77.
[10] கைலாசபதி, க. (1986).ஈழத்து இலக்கிய முன்னோடிகள்.சென்னை: மக்கள் வெளியீடு ப.14.
[11] சிவசண்முகம், சி. மற்றும் தயாளன், வே. (1989).மொழிபெயர்ப்பியல். கும்பகோணம்: அகரம்.
[12] சுந்தரம், இராம. (1999) பொருள் புதிது வளம் புதிது.தஞ்சாவூர் : வசந்தம்.
[13] வேலுப்பிள்ளை, சி. டி. (1984). அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம். வட்டுக்கோட்டை: யாழ்ப்பாணக் கல்லூரி.
[14] Brunt, R. (1999). Medical English since the mid-nineteenth century. In: Lothar, H., Hartwig K. & Herbert, E. W. (eds.), Languages for Special Purposes. An International Handbook of Special-Language and Terminology Research. Vol. 2, 1452−1459. Berlin, New York: de Gruyter.
[15] Ebenezer, C. (1891). Life and Letters of Samuel Fisk Green M.D. of Green Hill, printed for Family Friend.
[16] Sager, J.C. (1990). A Practical Course in Terminology Processing. Amsterdam: John Benjamins.
[17] Temmerman, R. (2013). Primary and secondary Term Creation and the Process of Understanding. Department of Applied Linguistics: Vrije Universiteit Brussel.