இரட்டைக்காப்பியங்களில் வருணாசிரம முறைகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-2
Year of Publication : 2021
Authors : Dr.B.Periyaswamy


Citation:
MLA Style: Dr.B.Periyaswamy "Varunasirama methods in dual epics" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 76-85.
APA Style: Dr.B.Periyaswamy, Varunasirama methods in dual epics, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 76-85.

சுருக்கம்:
பழந்தமிழரிடையே வருணப் பாகுபாடு கிடையாது, தொழில் அடிப்படையிலான பிரிவுகளே நிலவின. இரட்டைக் காப்பியத்தில் அந்தணர்கள், பார்ப்பார், நான்மறையாளர், இரு பிறப்பாளர், உயர் பிறப்பாளர் முதலிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மன்னர்களுக்குச் செங்கோலும், வெண்கொற்றக் குடையும் கூறப்படுகின்றன. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கத்தில் கடல் வாணிபம் நடைபெற்றதை அறியமுடிகிறது. ‘உழுவார் உலகத்தார்க்காணி’ எனத் திருவள்ளுவரும் வேளாண் மாந்தரைப் போற்றுகின்றார். இடையர்கள், கோவலர் அல்லது ஆயர் என்று அழைக்கப் பெற்றனர். இடைக்குல மகளிர் ஆய்ச்சியர் என்று அழைக்கப்பட்டனர். பொன் அணிகலன்களைச் செய்பவர்கள் தற்காலத்தில் ஆசாரி என்று அழைக்கப்படுகின்றனர். பொன்னலாகிய வேலைகளைச் செய்வதால் பொற்கொல்லர், கொல்லன் என்றழைக்கப்பட்டனர். கணிகையர், காவற்கணிகையர், ஆடற்கூத்தியர், பூவிலை மடந்தையர், கடைகழி மகளிர், வம்பப் பரத்தையர், எண்ணென் கலையோர், பண்ணியன் மடந்தையர், தாசியர் எனப் பல்வேறு வகையான பொதுமகளிர் கூறப்படுகின்றனர். இவ்வாறு காப்பியக்காலத்தில் சமயங்கள் தோன்றலாயின. இன்று கிராமங்களில் குறிப்பிட்ட சாதி, சமயங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்வதைப் போல சிலப்பதிகார காலத்தில் நகரங்களில் தனித்தனி வீதிகளில் குறிப்பிட்ட தொழில் செய்தோர் வாழ்ந்து வந்ததைக் காண முடிகின்றது. சாதிய பாகுபாடும் தனியிட ஒதுக்குமுறையும் இரட்டைக்காப்பியங்களில் காண இயலுகிறது. இதுவே பிற்கால சாதியவழி இருப்பிடத்திற்கும் சாதிய பாகுபாட்டு நெறிக்கும் வித்திட்டது என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

முக்கிய வார்த்தைகள்:
அந்தணர்கள், அரசர்கள், வணிகர்கள், வேளாளர்கள், இடையர்கள், கொல்லர்கள், அடிமைமுறை, பரத்தைமை.

துணைநூற்பட்டியல்:
[1] பரிமேலழகர் (உரை), திருக்குறள், பழனியப்பா பிரதர்ஸ், 2017.
[2] ந.மு.வேங்கடசாமி நாட்டார், மணிமேகலை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2009.
[3] புலியூர் கேசிகன், சிலப்பதிகாரம் தெளிவுரை, கொற்றவை பதிப்பகம், 2014.
[4] ஒளவை. துரைசாமிப்பிள்ளை, புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை,2015.