தகழியின் இரண்டுபடி - மாறாத மரணக்களங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-2
Year of Publication : 2021
Authors : K. Aswin


Citation:
MLA Style: K. Aswin "Two steps of the plate - unchanging death fields" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 43-59.
APA Style: K. Aswin, Two steps of the plate - unchanging death fields, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 43-59.

சுருக்கம்:
தகழிசிவசங்கரப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட மலையாளநாவல் 'இரண்டங்கழி' (1948). அதைத் தமிழில் 'இரண்டுபடி' (1990) எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார் திரு. டி. ராமலிங்கம்பிள்ளைஅவர்கள். நாவல் விவசாயக்கூலிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடக்கும் வர்க்கம், மற்றும் சாதிப்பிரச்சினையைக் கூறுகிறது. இங்குகோரன், சிருதை, சாத்தன் என்பவர்கள் தனித்தனிப் பாத்திரமாக நாவல் முழுக்க உருக்கொண்டு ஏழை விவசாயக்கூலிகளென்று, கொத்தடிமை நிலையை நமக்கு உணர்த்துகிறார்கள். மதமும், அரசியல் கட்சிகளும் தங்கள் பொய்யான வாக்குகள் மூலம் இம்மக்களை திசைத் திருப்புகின்றனர். வழக்கபோல கம்யூனிஸ்ட் இயக்கம்தான் இவர்களின் உழைப்பை, அதன் மதிப்பை அவர்களுக்கு இனங்காட்டித்தருகிறது. இதனால் விவசாயிகளைக் கொன்றுவிடத்துடிக்கும் முதலாளிகளின் செயல்பாடுகள் எப்படி அமைகிறது, அதற்கு ஈடுகொடுத்து தங்களது வாழ்வை அடமானம் வைத்து தங்களது போராட்டத்தை எப்படித் தொடர்கிறார்கள் என்பதுதான் நாவலின்அடித்தளம்.

முக்கிய வார்த்தைகள்:
சாகுபடி, பண்ணையம், வேளாண்மை, ஐந்துகூலியேன். கதிர்க்கட்டு செலவு, கதிரறுப்பு, குத்துபதம் (அளக்கிற போதுள்ள ஒருவருமானம்), பிடிப்பதம் (ஓரினம்வருமானம்), அளக்கிடை (அளவுக்காரனுடைய வருமானம்), சீவாடு (ஒருவயல்வேலைப்பொறுப்பாளியின்வருமானம்).

துணைநூற்பட்டியல்:
[1] தழி சிவசங்கரப்பிள்ளை, இரண்டுபடி, டி.ராமலிங்கம் பிள்ளை (மொ.ப,ஆ), சாகித்ய அகாதெமி, புதுதில்லி, 1948, தமிழில் 1990,
[2] ம.திருமலை, தமிழ் மலையாள நாவல் ஒப்பாய்வு, பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, மு.ப.1987.