திருக்குறள் வெளிப்படுத்தும் ஐம்புலனடக்கம் - ஒரு சிறப்பாய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-2
Year of Publication : 2021
Authors : Nagarathnam Sudarshini


Citation:
MLA Style: Nagarathnam Sudarshini "Thirukkural Revealing Aimpulanadakkam - A Special Review" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 18-25.
APA Style: Nagarathnam Sudarshini, Thirukkural Revealing Aimpulanadakkam - A Special Review, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 18-25.

சுருக்கம்:
அறிவினைக்கொண்டு ஐம்பொறிகளின் வழி வெளிப்படும் உணர்ச்சிகளை நெறிப்படுத்தும் புலனடக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகிறது. ஐம்புலன்களை முறையாக கட்டுப்படுத்தும் போது மனிதன் பெருமையடைகின்றான் என்ற காரணத்தினால் இலக்கியங்கள் அதன் அவசியத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. எனினும் புலனடக்கம் எனும் கருத்து ஒன்றாக இருப்பினும் இலக்கியங்கள் அதனை வெளிப்படுத்தும் வகையில் பல வேறுபாடுகளைக் கொண்டவனவாகக் காணப்படுகின்றன. இவ்வடிப்படையில்; அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலின் வழி வாழ்க்கைக்குரிய பல விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்துகின்ற இலக்கியமாகிய திருக்குறள், ஐம்பொறி, ஐம்புலன் சார்ந்து வெளிப்படுத்துகின்ற விடயங்கள் யாவை, அவை மனிதனை வழிப்படுத்தும் வழிவகைகள் பற்றி வெளிப்படுத்துமாறு, புலனடக்கம் பற்றி வெளிப்படுத்துகின்ற விடயங்கள், அதிகாரங்களில் அதன் வைப்புநிலை என்பவற்றை அறியும் நோக்கோடு ‘திருக்குறள் வெளிப்படுத்தும் ஐம்புலனடக்கம் - ஒரு சிறப்பாய்வு’ எனும் தலைப்பின் கீழ் இவ்வாய்வு திருக்குறளை முதனிலை ஆய்வு ஆதாரமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
திருக்குறள், ஐம்புலனடக்கம், ஐம்புலன்கள், அறஇலக்கியங்களில் புலனடக்கம்.

துணைநூற்பட்டியல்:
[1] திருவள்ளுவர் – திருக்குறள்
[2] சௌரிராசன். பொன், (2005), திருக்குறளில் பொதுநிலை உத்திகள், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
[3] புலியூர்க்கேசிகன்., (2010), இருபத்தி ஏழாம் பதிப்பு, திருக்குறள் புதிய உரை, சென்னை; பூம்புகார் பதிப்பகம்.